பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

முல்லை பிஎல். முத்தையா 6 1

@2

இருந்த தமிளர் எங்கே?

ஒரு திருமண வீட்டில், தண்ணிர் பானை அருகில் ஒரு தமிளர் (குவளை) வைக்கப்பட்டிருந் தது. எவரோ அதை எடுத்துச் சென்று விட்டார் போலும்! அங்கே தமிளர் காணப்படவில்லை,

அவசரமாக ஒருவர் தாகம் மிகுதியால், தண்ணிர் பானை அருகில் சென்றார்.

தமிளரை அங்கே காணாமையால், இங்கே இருந்த தமிளர் எங்கே?' என்று இரண்டு முறை கத்தினார். - 3 : «

அப்போது திண்ணையில் உட்கார்ந்திருந்த புலவர், கத்திக் கொண்டிருந்தவரிடம், "இங்கே இருந்த தமிழர் இங்குதான் இருக்கிறார்கள்! வேறு எங்கும் போய் விடவில்லை; மேலும், இங்கே இருப்பவர்கள் அனைவரும் தமிழர்களே. இது தெரியாமல் கத்துகிறீரே என்றார்,

(ள’, 'ழ' வேறுபாட்டினால், உச்சரிப்பால், பொருள் மாறுபடுகிறது.)

(தமிளர்-குவளை. தமிழை தாய்மொழியாகக் கொண்டவர் தமிழர்) -