பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

முல்லை பிஎல். முத்தையா 65

●● இருவருமே திறமைசாலிகள்

புலவர் ஒருவர் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரைக் காண மற்றொரு புலவர் வந்தார்.

'வாரும் இரும் படியும்' என்றார் வீட்டி லிருந்த புலவர். உடனே, "குறட்டைச் சிக்கெனப் பிடி!' என்றார் வந்த புலவர். -

"இரும் படியும் என்பது வாரும், உட்காரும், படியும்! என்பது ஒரு பொருள். இரும்பை அடியும்’ என்பது மற்றொரு பொருள். குறட்டைச் சிக்கெனப் பிடி’ என்பதற்கு, நான் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினால், நீர் குறட்டைவிட்டு தூங்க வேண்டியதே? என்பது ஒரு பொருள்.

'நான் இரும்பை அடிக்க முற்பட்டால், நீர் குறடைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியதே' என்பது மற்றொரு பொருள்.

6ア புலவர் கொடுத்த சாபம்

செல்வர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கருமி. எவருக்கும் எதுவும் கொடுக்கவே மாட்டார்.

ஒரு புலவர், அந்தச் செல்வரைப் புகழ்ந்து பாடினால், ஏதேனும் தருவார், என்று பாடல்