பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

அதைப் பொறுக்காத சவ்வாதுப் புலவர், 'ஐயா, சர்க்கரைப் புலவரே! உங்கள் பெருமையை அதிகமாக பறைசாற்றாதீர்கள். 'சர்க்கரை” தொண்ட மட்டுமே; சவ்வாது கண்ட இடமட்டும்' எனறான். -

ア●

கூசாமல் குடிப்பவர்

ஒரு புலவருடைய வீட்டுக்கு, அவருடைய நண்பர் ஒருவர் சென்றார், களைப்பு மிகுதியால் அவருக்குத் தண்ணிர் தாகம் மிகுந்தது. சுற்று முற்றும் பார்த்தார். அங்கே கூசா என்ற பாத்திரத் தில் தண்ணீர் இருந்தது. அதன் அருகில் குவளை இல்லை. எனவே, அப்படியே கூசாவைத் தூக்கி தண்ணிர் அருந்தினார். -

அதனைப் பார்த்த புலவர், 'நீர் கூசாக் குடியராக இருக்கிறீர்!’ என்று கூறினார்.

(கூசாக் குடியர்' என்ற சொல்லுக்கு, கூசாமல் குடிப்பது என்ற பொருள் உண்டு, மதுவைக் குடிப்பதற்கும் அவ்வாறு சொல்வது உண்டு. கூசா வோடு குடிப்பது" என்றும் பொருள்.)

ア雪 எல்லோரையும் தாங்குகிறார்

உள்ளுரில் இருந்த கோயில் ஒன்று மிகவும்

பாழடைந்து காணப்பட்டது. அதைப் புதுப்பித்து