பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

கரந்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. புலவர் கள், அறிஞர்கள், பொதுமக்கள் பலரும் கூடி இரு ந்தனர்.

மேற்படி நூலை எழுதிய ஆசிரியர் 'கொங்கை’ என்னும் சொல்லை, பல இடங்களில் கூறியிருந் தார். . அப்போது அவையில் இருந்த பேரறிஞர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுந்து, நூலாசிரியர் கொங்கு நாட்டவர்; ஆதலினால், தமது நாட்டை அடிக்கடி நூலில் கொங்கை என்று குறிப்பிட்டிருக்கிறார். நீங்க்ள் யாரும் அதனைக் குற்றமாக எண்ணிக் கொள்ளாதீர்கள்' என்று கூறினர். -

மேற்படி நூலாசிரியர் நன்றி கூறும்போது, 'நாட்டார் ஐயா அவர்கள் நாட்டைப்பற்றிக் கருத்துச் செலுத்துவது மிகவும் போற்றத் தக்கதாக இருக்கிறது' என்றார்.

(கொங்கு நாடு’ என்பது, கோயமுத்துார் மாவட்டத்தைக் குறிக்கும் கொங்கை என்றும் கூறுவர். 'கொங்கை என்பது தனத்தையும் குறிப்பிடுவதாகும். .

73

உண்டு உவக்கவில்லை

அறச் சாலையில் உணவு அருந்திவிட்டு வெளியே வந்த புலவரைப் பார்த்து உண்டு