பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

முல்லை பிஎல். முத்தையா - 71

வந்தீரோ?” எ ன் று கேட்டார் அவருடைய நண்பர். .

அதற்கு புலவர், உண்டு உவந்தேன் இல்லை: சோற்றிலே கல்லும், நெல்லும் காணப்பட்டன: சாம்பார் ரசம் முதலானவற்றிலே உப்பு மிகுதி. இவ்வாறு இருந்ததனால், நான் உண்டு உவக்க வில்லை.” என்று பதில் அளித்தாள் புலவர்.

(உண்டு வந்தீரா? என்பதை உண்டுவந்திராஉண்டு உவந்தீரா? என பொருள் பிரித்து, பதில் அளித்தார் புலவர். உவந்து - மகிழ்ந்து)

亨蕊

சருவமும் உமக்கே!

புலவர் ஒருவர், தம் நண்பர் வீட்டுக்கு விருந் தினராகச் சென்றிருந்தார். பனிக்காலம் ஆனதால், சருவத்தில் வெந்நீர் வைக்கப்பட்டிருந்தது. புலவர் குளிக்கச் சென்றார். .

. அப்போது, புலவரே, நன்றாகக் குளியுங்கள்.

வெந்நீர் முழுவதும் உங்களுக்குத்தான்!” என்றார் நண்பர். X

அதைக் கேட்ட புலவர், 'சருவமும் எனக்குத் தானா?” என்று கேட்டார்.

"ஆம், சருவமும் உங்களுக்குத்தான்; வீட்டுக் குப் போகும்போது அதையும் நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்’’ என்று கூறினார் நண்பர். o