பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

(சருவம் - எல்லாம்; உலோகத்தால் செய்யப் பட்ட பாத்திரம்.)

ア5

வாயில் எடுக்க வேண்டுமா?

பொங்கல் வி ழாவுக்குப் புடைவை எடுப்பதற் காக, மனைவியுடன் புலவர் துணிக்கடைக்குச் சென்றார். *

கடையில் நுழையும்போது, புலவரிடம் வாயி லெடுக்க வேண்டும்' என்றாள் மனைவி.

அப்படியா? இங்கே வா’ என்று அவளைச் சாக்கடைப் பக்கம் அழைத்துச் சென்றார் புலவர்.

மனைவி, இங்கே ஏன் அழைத்துக்கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டாள்.

வாயில் எடுக்க வேண்டும் என்று சொன்னாயே எடு' என்றார் புலவர்.

மனைவி சிரித்தபடியே, வாயில் புடவை எடுக்க வேண்டும் என்றல்லவா சொன்னேன்’’ என்றார். -

"மசக்கை வந்து விட்டது போலும் என்று நான்

நினைத்து விட்டேன்’ என்று கூறிச் சிரித்தார் புலவர். 3 & . -