பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

盏 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

அப்போது, நாட்டில் சீனிக்கு மிகவும் தட்டுப் பாடு; எனவே, சீனிக்குப் பதிலாக வெல்லம் கருப் பட்டியைப் பயன்படுத்தி வந்தனர் மக்கள். காபியின் நிறத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

"எப்படியாவது எனக்குச் சீனி போட்டுக் காபி வழங்குங்கள் என் பெயரே சீனி நாடார் அல்லவா?’’ என்று கேட்டுக் கொண்டார். - -

அப்போது அருகில் இருந்த உள்ளூர் புலவர், அவரைப் பார்த்து, 'ஐயா புலவர் அவர்களே! உங்கள் பெயரே சீனி நாடார். சீனியை (நாடாத வர்) விரும்பாதவர் என்று அமைந்துள்ளது. ஆனால் நீங்களோ சீனியை மிகவும் நாடுகிறீர்களே’ என்றார்.

இடமா? வலமா?

சென்னை நகரப் பேருந்தில் புலவர் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது பேருந்தில் கூட்டம் நிறைந் திருந்தது. புலவரின் நண்பர், இடம் இல்லாமை யால், தொங்கும் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நின்றார். அவரைப் பார்த்த புலவர் தாம் சிறிது தள்ளி உட்கார்ந்து. நின்று கொண்டிருந்த நண்பரை உட்காரச் சொன்னார்.

அவர் உட்கார்ந்ததும், 'எனக்கு தாங்கள்

இடம் அளித்ததற்கு நன்றி' என்றார் நண்பர்.