பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

*感4, புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

9டு

பாராச் சேவகன் பார்க்கவில்லை

சிற்றரசர் ஒருவரைக் காண அவருடைய அரண்மனைக்கு ஒரு புலவர் சென்றார்.

பாராச் சேவகன் புலவரை உள்ளேவிட மறுத்து விட்டான். . -

புலவர் மன்றாடிப் பார்த்தார். பயன் இல்லை; பிறகு, அங்கே வந்து கொண்டிருந்த ஒரு அதிகாரி யின் தயவால், அரசரிடம் போய்ச்சேர்ந்தார் புலவர்.

காவலாளியான பாராச் சேவகன், தம்மை உள்ளே விட மறுத்த செய்தியை, வருத்தத்துடன் அரசரிடம் கூறினார் புலவர். -

அரசர் வருந்தி, பாராச் சேவகன்மீது கடும் சினங்கொண்டு, உடனே அவனை வேலையிலிருந்து நீக்கிவிட உத்தரவிட்டார். .

பாராச் சேவகன் புலவரை அணுகி, காலில் விழுந்து வணங்கி, நடந்ததைக் கூறி தன் குடும்பத் தைக் காப்பாற்றுமாறு பணிவோடு மன்றாடினான்.

புலவர் அவனிடம் கருணை கொண்டார். அரசரைப் பார்த்து, 'அரசர் பெருமான்ே அவன் பாராச் சேவகன். ஆகையால், என்னையும் பார்க்காமல், எதனையும் பார்க்காமல் நடந்து கொண்டான். நீங்களும் அவனுடைய தவறைப் பாராமல், மன்னித்து, அவனை மீண்டும் வேலை