பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5236 கம்பன் கலை நிலை ஆசை நோயால் தானகவே அழிந்து அவன் நாசம் ஆயினன்; அக் கோப் இல்லையானல் ஈசன் கைலையை எடுத்த அவ்விரனை யார் வெல்ல வல்லவர்? வெல்வரோ? என்றதில் ஒகாரம் எ வ ரு ம்! அவனை வெல்ல முடியாது என்பதை வலியுறுத்தி நின்றது இராமனுடைய வீர பராக்கிரமத்தால் இராவணனை வென்று விடவில்லை; அவ ன் செய்து கொண்ட தீமையே அவனைக் கொன்.று முடித்தது என்று முடித்திருக்கிருன். முடிவில்லாத வர பலங்களையுடையவன் முடிந்துள்ளமுடிவு உணர்ந்துகொள்ள வந்தது. திவ்விய நிலைமைகள் செவ்விய தலைமைகளை விளக்கின. வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும். தெவ்வர் எவரும் இராவணனை யாதும் செய்ய முடியாது என்பதை வலியுறுத்த இவ்வாறு இதனை எடுத்துக் கூறினன், ஆலகாலவிடம் உலகத்தை எல்லாம் அழிக்கும்படி அடலோடு கடலிலிருந்து எழுந்தது. தேவர் யாவரும் நடுங்கினர்; ஈசன் அதனை எளிதே எடுத்து விழுங்கின்ை; அது அடங்கி கின்றது. கொடிய விடம் போன்ற படைகள் எவையும் இலங்கேசன் எதிரே அடங்கி ஒழியும்; வெவ்விய விடம் ஈ ச னே ஒரு வேளை விழுங்க சேர்ந்தாலும் தெவ்வருடைய படை இவனே அணுகாது. தெவ்வர் = பகைவர். இவ்னேடு மாறுபட்டுத் தீங்குச் செய்ய மூண்டவர் மாண்டு பட்டனரே அன்றி இவன் பாண்டும் மாளா தவனப் நீண்டு வந்துள்ளான் என இவனது ஆண்டகைமையை யும் விர வெற்றியையும் ஈண்டு இங்ங்னம் இசைத்துக்காட்டினன். உன்னல் பொன்றின்ை என்ற போதும் பொய் என்பார். இறுதியில் இவ்வாறு அறுதியிட்டு உறுதி கூறினன். 'இராம காதா! உன்னல் இராவணன் மாண்டு பட்டான் என்று பாண் டேனும் யாரிடமேனும் சொன்னல் அதனை ஒருவரும் நம்பார்; பொய் என்றே சாதிப்பார். இதனை மெய்யாக நம்புக. == கடல் அடியோடு வற்றியது; மேருமலை நீருப் இற்றது; வானம் இடிந்து விழ்ந்தது என்று ஒருவன் சொன்னல் அவனே வெறியன் என்றே வையம் வையும்; வெப்ப பொப் என்றே யாரும் தேறி நிற்பார்; அவ்வாறே இராவணன் பொன்றின்ை