பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5244 கம்பன் கலை நிலை இனப் பிரிந்து விலகிப் போய் இன்னவாறு இறந்த பின் இன்ன லுழக்க அழுது கவிக்கின்றேன்; உலகம் என்ன என்ன சொல் லும்? அன்னே! அண்ணு ' என்று பன்னிப் புலம்பி வீடணன் பதைத்துத் தடித்தான். பரிதாப உரைகள் கருதியுணர வந்தன. உள்ளம் வருக்திக் குடும்பத்தை அறவே மறக்க வெளியே தறந்து போயிருந்தாலும் உடன் பிறக்க பாசம் ஓங்கி வளைக் தமையால் எங்கி அழுதான். குடலின் தொடர்பு உடலையும் உள் ளத்தையும் அடலோடு பிணித்திருத்தலை துணி த் து உணர்ந்து கொள்கிருேம். துயரமான உயிர்வேதனையால் உள்ளம் உயங்கி உணர்வு கலங்கி ஒலமிட நேர்ந்தான். புலம்பி அழுத மொழிகளில் மானச மருமங்கள் வெளியே தெளிவாப் விளங்கியுள்ளன. _சனகி எனும் பெரு நஞ்சு. இதனை நினைவு கூர்ந்து சிந்திக்க வேண்டும். தெய்வக் கற்பிள்ை, பத்தினித் தெய்வம், உலகின்தாய், அருந் ததிக்கும் அருந்ததி, அமுதினும் இனியவள் எனச் சானகியை முன் னம் புகழ்ந்து போற்றி வந்தவன் இங்கே பெருநஞ்சு என்ற தன்னை மறந்து இன்னல் கிலையில் வீடணன் இவ்வாறு பேச நேர்ந்தான்.) நஞ்சுக்குப் பெருமை ஆவது தன்னைக் கண்டவன் உயிரைக் காணுமல் போக்கி விடும் திறம். கெஞ்சம் அஞ்ச வரு வது நஞ்சு என வந்தது. உயிரைக் கொல்லும் துயரம் உடையது என்பது பெயராலேயே தெளிவாப் விளங்கி கின்றது. தன்னை உண்டவனை மாத்திரம் நஞ்சு கொல்லும், எவ்வளவு கொடியது ஆயினும் உண்ணுதவரை யாதும் அது பண்ணுத; இயல்பான அந்த உலக நஞ்சினும் உயர்வான அதிசய நஞ்சு இங்கே விழி தெரிய வந்தது. அமுதினும் இனியவள் கஞ்சா? சீதையை இராவணன் கண்ணுலேதான் பார்த்தான்; கிட்ட செருங்கக்கூட வில்லை; ஆயினும் அவலமாய்ச் செத்தான் ஆக லால் கண்னலே நோக்கவே போக்கியதே உயிர் என்று அண் ணன் அழிவினை எண்ணித் தம்பி கண்ணிர் விட்டு இவ்வண்ணம் கதறிஞன். தாயவளைத் தீயவள் என்றதுமாயமொழியாகின்றது. பார்த்த அளவிலே கொல்லுகின்ற கஞ்சுக்குத் திட்டிவிடம் என்று பேர். சீதைக்கு இந்தப் பெயரை இங்கே உய்த் தனா