பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5282 கம்பன் கலை நிலை பதுமகோமளை. குரபன்மன் இராவணனிலும் அதிசய ஆற்றல்களுடைய வன்; ஆயிரத்து எட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகங்களா ஆண்டுவந்தவன். அறநெறி திறம்பிக் தேவர்களுக்கு அல்லல்கள் இழைக்க சேர்க்கமையால் முருகப் பெருமான் அவனை அழித்து ஒழித்தார். அவனுடைய அருமை மனைவி பெயர் பதுமகோமளே; பேரழகும் பெருங் குணங்களும் ஒருங்கு நிறைந்தவள். தன் கணவன் மாண்டான் என்று கேட்டதம் உடனே உயிர்போப் விட்டது. அத் தேவியின் ஆவி நீங்கியது அதிசயமா ஓங்கியது. அதுகிகழ்ந்துழி அகன்பதி அவுனர்கள் ஒருசில்லோர் கதுமெனச் சென்று காவலன் கங்தவேள் உய்த்திட்ட துதிகொள் வேலில்ை மாய்ந்தனன் என்பதை துவலுற்றர் பதுமை அம்மொழி கேட்டனள் துனேவியர் பலரோடும். (1) காவல் மன்னவன் இறங் கனன் எனும்உரை கன்னத்துள் மேவும் எல்லேயில் அசனிஏறு உண்டவெம் பணியேபோல் தேவி ஆகிய பதுமகோ மளே எனும் திருமங்கை ஆவி நீங்கினள் தலையளி ஆகியது அதுவன்ருே? (2) (கந்தபுராணம், இரணிய 1-2) தன் நாயகன் இறக்கான் என்று கேள்வியுற்றதும் இத்தேவி ஆவி நீங்கியுள்ளமையை ஈ ண் டு அறிந்து கொள்ளுகிருேம். கோமளம் = இளமை, அழகு. என்றும் இளமையான அழகி யாப் இனிய நீர்மையோடு விளங்கி யிருந்தாள் ஆதலால் பதும கோமளை எனத் தலங்கி அதிக புகழுடன் இலங்கி கின்ருள். தேவர் முதல் யாவரும் துதி செப்துவர அதிசய நிலையில் வாழ்க்க வங்க வேக்கர்கள் அரிய பெரிய புண்ணிய சாலிகள் ஆகலால் கண் ணியமான மனைவிகள் அவர்க்கு ம கி ைம ய ர வாய்ந்து கொள்ளுகின்றனர். அவர் பிரிந்து போகவே இக் கேவியரும் உடனே ஆவி நீங்கி இறந்து போகின்றனர். கோப்பெருந்தேவி. நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் கோவல னேக் கண்டித்தது தவறு என்று தெரிந்த தம் உடனே உள்ளம் தடிக்க அரியணையிலிருக்கு கீழே சாய்ந்து மாய்ந்து போனன்; போகவே அம்மன்னன் தேவியும் அப்பொழுதே ஆவிநீங்கினுள்.