பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5290 கம்பன் கலை நிலை அண்ணல் எண்ணியது. அழுகையை மறந்து உழுவலன்புடன் அருகே கெழுமி யிருக்க வீடணனை இலங்கைக்கு அரசன் ஆக்கவேண்டும் என்று இராமன் எண்ணினன். நீண்டகாலமா கினைந்து வந்ததை ஈண்டு செய்ய விரைந்தான். இலக்குவனே இலக்கோடு நோக்கிளுன்; அக்கப் பார்வையின் கீர்வையைக் கூர்மையா உணர்ந்த அவ் விர இளவல் இவ் விர மூர்த்தி எதிரே வந்து வணங்கி கின்ருன். 'தம்பி உன் கமையனே மணிமுடி குட்டி இலங்கை இராச்சி யத்துக்கு மன்னன் ஆக்கியருள்' என்று நம்பி நயமா மொழிக் தான். அருகே கின்ற சுக்கிரீவனையும் அனுமானையும் இனிது கோக்கி நீங்களும் கம்பியோடு கூடப் போய் வேண்டியதை நெறிமுறையே விரைந்து செய்யுங்கள் என்று ஏவி அருளினன். சோதி யான்மகன் வாயுவின் தோன்றல் மற்று ஏ. தில் வானர விரரொடு ஏ.கிே ஆதி நாயகன் ஆக்கிய நூன்முறை திே யானே நெடுமுடி சூட்டுவாய்! (1) என்று கூறி இளவலொடு ஆரையும் வென்றி விரன் விடையருள் வேலையில் கின்ற தேவர் நெடுங் திசை யோரொடும் சென்று தத்தம செய்கை புரிந்தனர். அதிசய வெற்றியால் கனக்குக் கிடைத்த செல்வங்களை எல்லாம் விட னனுக்கே தனியுரிமையாக இ ரா ம ன் இங்கே வழங்கியிருக்கிருன். இராவணனை வென்ற வுடனே இலங்கை ஆட்சி முழுவதும் இராமனுக்கு உரிமையாய் அமைந்தது. அரிய வெற்றிப் பரிசாப் பெற்ற பெரிய திருவை உற்ற துணைவனுக்கு உரிமையோடு இக்கொற்றக் குரிசில் கொடுத் திருப்பது குண நீர்மையையும் கொடை மாண்பையும் விளக்கி நிற்கிறது. குலவிர கிலே பலவகையிலும் தலைமையோடு தழைத்து மிளிர்கிறது. சொல்லும் செயலும் வெல்லும் விறலோடு விளங்கி வருவது பாண்டும் வித்தகக் காட்சியாய்க் துலங்கி வருகிறது. தன் பால் வந்து அடைக்கலம் புகுக்கபொழுது விபீடணன் அடைக்கிருக்க கண் கலக்கத்தைக் கண்டு இராமன் இரங்கினன், 'இந்த நாட்டில் இராசே தேசத்தைவிட்டு விரைந்து வெளியே