பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5300 கம்பன் கலை நிலை கின்றவரை எவ்வழியும் திவ்விய நிலையில் உயர்த்தி மேன்மை புரியும் பான்மையுடையது என்பதை அடைமொழியால் அறிந்து கொள்கிருேம். தருமநீதி இருமையும்பெருமையா இன்பம் தரும். ஈறு இலாத் தரும சீலl - * * * விடணனே இவ்வாஅ அருமை மொழியால் அழைத்திருக்கி ருன். புண்ணிய ஒழுக்கங்களை யுடையவனே என்று கண்ணிய மாக் கூறியிருப்பது எண்ணி யுணர வுரியது, நல்ல லேம் தோப்ந்த நீ ஞாலம் இன்புற கலம் பல புரிவாய் என்று நான் நம்பியுள் ளேன்; தரும சீலம் உடையவன் யாண்டும் நீண்ட புகழோடு கிலவி கின்ற இம்மையும் மறுமையும் இன்பமே பெறுவன்; அக்க நன்மை உன்னிடம் செம்மையாய் அமைந்துள்ளமையால் னம்மையும் நீ சுகமாப் வாழ்வாய் என வாழ்த்தி யருளினன். என்.றும் அழியாமல் எவ்வழியும் கிலேயாப் கின்று அதிசய கலங்களை அருள வல்லது ஆதலால் ஈறு இலா எனத் தரும சீலங் களை விசேடித்து அவற்றின் மருமங்களை விளக்கி உரைத்தான். கன்னிடம் அடைக்கலம் புகுந்தவனுக்கு அரிய பெரிய அரச பதவியை கல்கி உரிய கரும நீதிகளைப் போதித்து எவ்வுயிர்க்கும் இதமாய் ஆட்சி புரியும்படி இந் நீதிமான் அருளியிருக்கும் மாட்சி கோக்குல ஆட்சியாப் இங்கே காட்சிக்கு வந்துள்ளது. மறை தந்தளான். இராமனை இவ்வாறு இங்கே கவி குறித்திருக்கிரு.ர். முன்பு திருமாலாயிருந்து வேதங்களே அருளிச் செய்தவன்; பின்பு இராமனய் வந்து அந்த வேதவிதிகளை மேதினி அறிய கடந்து காட்டியவன் என்பதை இந்த வாசகம் வரைந்து காட்டி யுள்ள தி, வேக செறிகளையும் நீதி முறைகளையும் கரும லேங்களை யும் மனித மரபுகள் மருவி உயர வேண்டும் என்றே யாண்டும் கருதிவருதலால் தருமமூர்த்தி என இராமனை வானும் வையமும் வாழ்த்தி உரிமையோடு உவந்து போற்றி வருகின்றன.” தன்பால் அன்பால் வந்து சார்ந்தவரை வேந்தர் ஆக்கி வைத்து அவரை மாந்தர்க்கு இதம் செய்து வரும்படி அரிய உறுதி நலங்களை இனிது போதித்து வருவதில் விநய சாதுரியங் கள் விரிந்து விதிநியமங்கள் அதிசயமா விளங்கி நிற்கின்றன.