பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 5323 இழிந்த பழக்கங்களாலும் மடமைகளாலும் மனிதர் பிழை க%ளச் செய்துவிடுகின்றனர்; அவற்றைப் பொறுத்து அவரை மன்னித்து விடுபவர் மாண்புடையராப் உயர்ந்து திகழ்கின்ருர் வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை. (குறள், 155) பேதைகள் செய்கிற பிழையைப் பொறுத்துக் கொள்வது அரிய பெரிய வலிமையாம் என இது உணர்த்தியுள்ளது. சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே. (நறுந்தொகை) சிறுமை பெருமைகளின் நிலைகளை அதிவீரராமபாண்டியன் இவ்வாறு அருமையா விளக்கியிருக்கிருர். பிழை புரிபவர் மடை யராய்ச் சிறியராய் இழிவுறுகின்றனர்; அதனைப் பொறுத்து அருள்பவர் அறிஞராப்ப் பெரியராய் உயர்வுறுகின்றனர். To err is human, to forgive divine. (Pope) பிழை புரிவது மனிதகிலை; பொறுப்பது தெய்வ நீர்மை என இது குறித்துளது. பொறை புண்ணிய கிறையாகின்றது. க்னக்கு அல்லல்கள் இழைத்த பொல்லாத அரக்கியர்பாலும் இரக்கம் புரிந்து சீதை பொறுத்திருப்பது உயர்ந்த பெருக்ககை மையாப் ஒளிமிகுந்துள்ளது) இராட்சசிகளை ஒறுத்தல் கூடாது, பொறுத்தல் வேண்டும்! என்று உரைத்ததோடு அமையாது வல்லாத் துன்பங்களுக்கும் தானே மூலகாரணம் எனத் தன்னை யே குற்றவாளியாக் குறித்தது அங்கச் சித்தத்தின் செம்மை யைத் தெளிவுபடுத்திச் சீர்மையை நேரே விளக்கி கின்றது. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தி துண்டோ மன்னும் உயிர்க்கு. (குறள், 190) அயலாருடைய குற்றத்தைக் கூர்ந்து காண்பதுபோல் தம் முடைய குற்றத்தை ஒர்ந்து காணவல்லராயின் அவர் யாதொரு இதும் இலராப் உயர்ந்து விளங்குவர் என இது உணர்த்தியுளது. யான் இழைத்த வினையால் எல்லா அல்லல்களும் விளைந்தன என்று இங்நல்லாள் கூறியுள்ளமையால் வினையின் விளேவுகளையும் கருமங்களின் மருமங்களையும் தெளிவா உணர்ந்து கொள்ளுகி ருேம். உயர்ந்த உள்ளப் பண்புகள் ஈண்டு ஒளி புரிந்துள்ளன.