பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5328 கம்பன் கலை நிலை கோதேவியைத் தேவ மாதர் ஆவலோடு அலங்கரித்துள்ள நிலைகளை இவை அலங்காரமா விளக்கி யுள்ளன. மண்ணுக்கும் விண்ணுக்கும் மகிமை தர வந்துள்ள பெண்ணுக்கு உரிய கோலங்களைக் கண்ணுக்கு இனிமையாக அழகிய மங்கையர் விழுமிய நிலையில் விழைந்து மகிழ்ந்து செய்திருக்கின்றனர். சிறையில் மறுகியிருந்த அவலகிலே யாதும் தெரியாதபடி உயர்வான கோலங்களை அதிவிரைவில் உரிமையோடு புரிந்தனர். முதலில் கூந்தலைச் சரி செய்தனர்; நீண்டகாலமா எண்ணெய்ப் பசை யாதும் இன்றி நெடிய சடையாய்த் திரண்டு கிடந்த அக னேச் சிக்கு எடுத்துப் பக்குவமா ஒழுங்குபடுத்தினர். அதன் பின் பரிமள தைலங்கள் பூசி இனிய நீரால் முழுக்காட்டி அரிய ஆடை அணிகள் புனைந்து குறிய கலவைச் சக்கனங்கள் வனைந்து முத்துமாலைகளும் இரத்தின வடங்களும் அணிந்து திலகம் தீட்டி ஆலத்தி காட்டித் திருட்டி கோடங்கள் கழித்துச் சிறந்த போன் போடு யாவும் விரைந்து செய்து முடித்தனர். வடித்து முடித்த கோலங்கள் விசித்திரக் காட்சிகளாப் நன்கு விளங்கி நின்றன. முடிசூட்டுவிழாவில் தனது நாயகன் அருகே அரியணையில் இருக்க வருகிற ஒரு சக்கரவர்த்தினியை அலங்கரித்துச் சிங்கா ரிப்பது போலவே யாவரும் உளம் கனிந்து உவந்து புரிந்தனர். போனகம் துறந்த தையல். வான மங்கையர் சிங்காரிக்க அழகு செய்த சானகியைக் கவி இங்வனம் வரைந்து காட்டியிருக்கிருர் போனகம்=உணவு. ஊனும் உறக்கமும் தறந்து கணவனையே கருதிக் கடுத்தவம் புரிந்திருந்த கற்பாசி இவ்வாறு அற்புத அலங்காரங்களுக்கு அமைய நேர்ந்தாள். அரிய தவ வடிவம் அழகு படிந்தது. அயிலலும் துயிலலும் இன்றி அருஞ்சிறை இருந்த செயலினள் எனச் சீதை அசோக வனத்தில் அமர்ந்திருந்த நிலையை உலகம் அறிந்து வருந்தியுள்ளமையால் அவளது தவ கி லே ைம ைய உணர்ந்து கொள்கிருேம். புனிதமான புண்ணியவதி என்பது எண்ணி யுணர வந்ததி) உலக திலகம் கலமாய் நிலவி கின்றது. பெண்மைக்கு எல்லாம் காணி.

பெண் எனப் பிறந்தவர் யாவரும் தங்கள் கண் எனக் ---