பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5330 கம்பன் கலை நிலை கற்பு என்னும் திண்மையுடையவளே உண்மையான பெண்; அந்தப் பெண்ணைத் தனக்கு மனைவியாகப் பெறுகின்றவன் அரிய பேறுகள் பெற்ற பெரிய பாக்கியவான் எனத் தேவர் இங்கனம் குறித்துள்ளார். புனித மனைவியால் மனிதன் மகிமை பெறுகிருன். கற்புடைய பெண் அமிர்து. (சிறுபஞ்சமூலம், 4) சீரிய பெருமையைக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். உண்மையான பெண்மைக்கு உயிர் நிலையமாய்க் கற்பு ஒளி புரிந்துள்ளது.(அத்தகைய கற்பு சீதையால் அற்புத மகிமையை அடைந்துள்ளமையால் கற்புக்கு அணி என கின்ருள். கம்பு எத்தகையது? எவ்வளவு திண்மை வாய்ந்தது? எத்துணை மகிமை கோப்ந்தது? என்பதை உலகம் எல்லாம் தெளிவாய் அறிய இல் வுத்தமி ஒழுகி உணர்த்தியுள்ளாள். அந்த உண்மையை உய்த்து உணரும்படி கவி இங்கே வித்தக விசயமாய் விளக்கி யருளினர். கொடிய காமி கையில் அகப்பட்டும் யாதும் நிலை குலையா மல் தன் கற்பை இக்குலமகள் காப்பாற்றியிருக்கும் திண்மை யை எண்ணி யுணர்பவர் எவரும் கண்ணிர் சொரிந்து கருதி யுருகுவர். பெண்மைக் காப்பு பெருமையைக் காத்துள்ளது. தன்னை வஞ்சனையாக் கவர்ந்த எடுத்து விமானத்தில் வைத் துக் கொண்டு வானவிதி வழியே இராவணன் வேகமாய்ப் போகும் பொழுது இப்பெண்ணரசி கருதி மறுகியது அந்த உள்ளத்தின் உறுதிநிலையையும் உயர்வையும் உணர்த்தி கின்றது. கற்பு அழியாமைஎன் கடமை ஆயினும் பொற்பழியா வலம்பொருந்தும் போர்வலான் விற்பழி யுண்டது வினேயினேன் வந்த இற்பழி யுண்டது என்று இரங்கி ஏங்கிள்ை. (சடாயு-185) பரிதாப நிலையில் சீதை இவ்வாறு கருதி மறுகியுள்ளாள். தன் கற்பை யாராலும் குலைக்க முடியாத, எவ்வழியும் சிதை பாது, ஆயினும் தான் பிறந்த் குடிக்கும் புகுந்த குடிக்கும் இழிந்த பழி நேர்ந்ததே என்று விழிநீர் சிந்தி உருகியிருக்கிருள். பொருஞ்சிறை இற்றதேல் பூவை கற்பு எனும் இருஞ்சிறை இருதுஎன இடரும் நீங்கின்ை. (சடாயு-144) இராவணன் வாளால் வெட்டப்பட்டுச் சிறகு இழந்து