பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5384 கம்பன் கலை நிலை அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினர் மருங்குபின் முன்செல வழி இன்று என்னலாய் நெருங்கினர் நெருங்குழி கிருதர் ஒச்சலால் கருங்கடல் முழக்கு எனப் பொலிந்த கம்பலே. (2) பிராட்டி சிவிகை யூர்ந்து வருங்கால் யாண்டும் பெண்கள் திரண்டு எம்மருங்கும் நெருங்கியுள்ளமையை இவை காட்டி யுள்ளன. இவ்வாறு நெருக்கவே அரக்க விரர்கள் பிரம்புகளால் அடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர். விடணன் இலங்கை ஆட்சி யை அடைந்தமையால் அவனைச் சார்ந்திருந்த கிருதர் எல்லாரும் இராமன்பால் பேரன்புடைய ராப் ஏவல் செய்ய சேர்ந்தனர். கிருதர் ஒச்சலால் கம்பலை கடல் முழக்கு எனப் பொலிந்தது. முரட்டு அரக்கர்கள் விரட்டி அடிக்கவே மெல்லியமங்கையர் மருண்டு வெருண்டனர். மருங்கு எங்கும் நெருங்கி கின்ற பெண்கள் நிலைகுலைந்து ஒலமிடவே பெரிய ஆரவார ங்கள் யாண் டும் நீண்டு எழுந்தன. கருங்கடல் முழக்கு என்ற கல்ை அந்த ஒலிகளின் நிலைகளை உணர்ந்து அங்கே நேர்ந்த நெருக்கடியைத் தெளித்து கொள்ளுகிருேம். கம்பலை = அலமந்து கூவிய ஒசை. பேராசையோடு கூடிக் காண வந்த மகளிரிடமிருந்து இவ்வாறு பேரோசை எழவே இது என்னே இரைச்சல்?’’ என்று இராமன் அருகே இருந்தவர்களிடம் பரிவா வினவினன். அவ்வழி இராமனும் அலர்ந்த தாமரைச் செவ்விவாண் முகங்கொடு செயிர்த்து நோக்குரு இவ்ஒலி யாவது என்று இயம்ப இற்று எனக் கவ்வையில் முனிவரர் கழறி ஞாரோ. உரிய திசை வழியே ஒங்கி வந்த ஒசையைக் கூர்ந்து செவி சாய்த்து ஒர்ந்து நோக்கி இராமன் வினவியுள்ள நிலைமையை இதனால் உணர்ந்து கொள்கிருேம். இக்க விரன் இவ்வாறு வினவவே அந்த ஒலிகளின் நிலைகளை அறிந்தவர் உண்மையை உரைத்தனர். மாதவர் உரைகள் ஆகர வாய் வந்தன. ஆரவாரமான அமலைகள் நேர்ந்த காரணத்தை முனிவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது விடனன் வந்து இராமனை வணங்கி உரிமை மீதுார்ந்து அருகே அன்போடு கின்ருன்.