பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5338. கம்பன் கலை நிலை அழைத்து வந்து, எனக்கு இடர் இழைத்த கொடியவனைக் குலத்தோடு அ ஆழி த் து ஒழித்து, விசய கோதண்டத்தோடு விளங்கி கிற்கின்ற வெற்றிக் கோலத்தை நேரே கண்டு களிக்கும் படி செய்துள்ள மாருதிக்கு நான் என்ன கைம்மாறு செப் வேன்? என்றும் அழியாக விழுமிய சிரஞ்சீவியாப் அம்மதிமான் அதிசய நிலையில் வாழும்படி என் கற்பு செய்யுமானல் அதுவே எனக்கு அற்புத மகிழ்ச்சியாம் என்று நன்றியறிவால் நெஞ்சம் கரைந்து இவ்வுக்கமி கருதியுள்ளமையால் உயர்பெருந்தகைமை கள் இயல்பான தலைமை நீர்மைகளோடு தெரிய வங்தன. என் கணவன் சேவகக் கோலமும் காட்டி, எதிரியை அடியோடு வென்று வெற்றிக் கோலத்தோடு இராமன் கிற்கின்ற அந்த அதிசயக் காட்சியைத் தான் கண்டு மகிழும்படி கனக்குக் காட்டி யருளியக அனுமானே என்று சீதை சிந்தித்துள்ளதை இகனல் தெரிந்து கொள்ளுகிருேம். சேவகம்=விரம். (வீரத்திறலோடு போராடி கிருதர் மரபை நீருக்கித் தியவர் யாவரையும் வோ.முத்து கல்லோர் எல்லோர்க் கும் கலம் புரிந்துள்ளமையால் சேவகக் கோலம் என அதனை ஆவலோடு கூறினுள். உலக ஊழியனுப்க் கோதண்ட வீரன் ஈண்டு ஒளிபுரிந்து நிற்கின்ருன்; அந்த கிலேமையை இந்தக் குல மகள் வாய்மொழியால் கூர்ந்து ஒர்ந்த கொள்கிருேம்) உலகில் நேர்ந்து கின்ற கொடிய அல்லல்களே நீக்கவே அரசிைத் துறந்து வில்லும் கையுமாய் வெளி யேறி வெங்கான் அடைந்து முடிவில் இலங்கையை அடைந்து வந்த காரியத்தை முடித்து இவ்விர மூர்த்தி வெற்றியோடு ஆறுகல் பெற்றுள்ளான்.(சக்கரவர்த்திக் \திருமகன் என்பதைவிட வீரச் சேவகன் என்னும் வியனை சீரிய பேரே இக்கோமகனுக்கு விழுமிய மேன்மையாய் மேவியுள்ளது. அது இயல்பான பிறப்பால் சேர்ந்தது. இது செயலான சிறப்பால் சேர்ந்தது. வீரச்சேவகச் செய்கை என இராமனது போர்க் திறத்தை நேரே கண்ட இராவணன் முன்னம்’ வியந்து மொழிந்துள்ளதை இங்கே கி னே ங் த கொள்ள வேண்டும்)இந்த விரனுடைய போராடலைச் சீதை கண்டால் வேறு வீரர்களை எள் அளவேனும்

  • இந் நூல் பக்கம் 3966 வரி 33 பார்க்க.