7. இ ரா ம ன் 5351 சொல்லும்படி உடனே அனுமான உரிமையோடு அனுப்பினன். அதன்பின் அடுத்து வீடணனை விடுத்தான்; சீதையைச் சீரோடு அழைத்து வா! என்று இழைத்து விடுத்தமையால் அவன் போப் அவ்வாறே அழைத்து வந்தான். நாயகனைக் காணலாம் என்று ஆவலோடு வந்தவளை இப்படிக் கேவலமாப் பேசியிருக்கிருன். சென்று தா நம தேவியைச் சீரொடும் என்று மு ன் ன ம் சொன்னதே பின்னர் இன்னவாறு சீறிவைதற்கு எதுவாம் என எண்ணியே யாம். கனது சதியிடம் ஒரு சதித் திட்டக்கை இப் பதி இப்படிப் பதிய வைத்துள்ளமை அதிசய வியப்பா யுள்ளது. சிறையில் இருந்தபடியே பரிதாபமான கோலத்தில் இக்கட் பெண்ணரசி வந்திருக்கால் இவ்வாறு சீறி யிகழ முடியாது, இலங்கை வாழ்வில் அரிய பல சுகங்களை அனுபவித்தவள் போல் அலங்காரமாய் வந்தமையால் ஆங்காரமாப் பேச சேர்க்கான். பேசிய பேச்சுகளில் பெரிய சூழ்ச்சிகள் பெருகி யுள்ளன. ஐயம் தீர ஆற்றியது. கிருதர் வேந்தன் கையில் அகப்பட்டு பத்து மாதம் இலங் கையில் வெய்ய வரிடையே இருக்கவளை யாதும் கருகாமல் இரா மன் ஆவலோடு அனைத்துக் கொண்டானே! என்று வையம் ஐயமாய் வைய நேரும் ஆகலால் அக்க ஐயக்கை யாவரும் தெளிவாய்த் தெரியும்படி நீக்கி இத் தளயவளுடைய கற்பு நிலை *0 г. Ј எவ்வுலகும் எளிதே இனிது காணுமாறு செய்யவே இந்த ஐயன் இவ்வாறு இங்கே ஒரு வினேகமான நாடகம் கடத்த நேர்ந்தான். மாய நாடகம் மருமக் கூத்தாய் நீண்டது. உன்னை மீட்ட வரவில்லை; பிழையிலிருந்து என்னை மீட்டவே ஈண்டு நான் வந்துள்ளேன் என்றதில் இக் கோமகனுடைய பிழை நீக்கமும் விழுமிய நோக்கமும் வெளியாய் கின்றன. "جيم (தனது ஆரிய ஆவி அனைய இனிய தேவியைப் பாவி பழி காரி இழிபிறப்பினள் எனப் பலவகையாகப் பழித் தப் பெண் குலத்துக்குப் பெரிய பிழையாத் தோன்றினுள் என்று கொடிய பழிகளைத் தாற்றியிருப்பது நெடிய புகழ்களைத் தோற்றுவிக்கவே. பெரிய மாயக் கூத்தனுடைய அவதாரம் ஆதலால் அரிய காரியக் கூத்துகளை ஈண்டுச் சீரிய நிலையில் ஆடியிருக்கின்ருன்”
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/241
Appearance