பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5356 கம்பன் கலை நிலை சேர்க்காள்; முடிவில் கண்ணிசைக் கண்டு உண்ணிர் வேட்கை யோடு அது பருகப் புகுந்தது; இறுதியில் தெய்வாதீனமாக் கணவனேக் கண்டு வேணவாவோடு சேர இவளும் விரைந்து வந்தாள்; நீர் நிலையுள் இறங்க முடியாமல் காட்டுத் தீ அதனைத் தடுத்து கிறுத்தியது; உரிய நீர்மையாளனை அடைய முடியாமல் கோபத் தீ இவளே இடையே கடுமையா விலக்கியது. சுடுதியால் அது படுதுயர் உழந்தது; கடு மொழியால் இவள் அடு துயர டைத்தாள். இக்க ஒப்புமைகளை நுட்பா ஈண்டு உய்த்து உணர்க. பருந்து அடர்சுரம் என்ற து பாலைவனத்தின் வெப்ப நிலையை விளக்கி கின்றது. இலங்கைவாசம் கொடிய துயரமாப் இக்குல மகளுக்கு நேர்ந்துள்ளமையை இகளுல் ஒர்ந்து கொள்கிருேம். சானகிக்கு மானே உவமை கூறியது மென்மை மேன்மைகளின் தன்மை காண. காட்டு மான்கள் பால் இவ் விட்டு மானுக்கு இயல்பாகவே மிகவும் பிரியம்; அந்தப் பிரியத்தினலேயே மாய மானேக் கண்டதும் பாதும் காளுமல் ஆவல் மீக் கொண்டாள்; தன் காதலனைப் பிரிக் காள்; நோதல் பல அடைந்தாள்; நொந்து தவித்தாள்; இந்த நெடிய துயர்களுக்கெல்லாம் அந்தக் கொடிய மாயமான் பால் இக் குலமகள் கொண்ட பெரிய பிரியமேயாம். மான்ஆசை சானகிபால் மருவிகின்ற அப்பொழுதே வான்ஆசை யொடுகோக்கி வசைஒழிந்தது எனமகிழ்ந்தாள். மாய மானேச் சானகி விரும்பியபோது தீய துயரங்கள் யாவும் நீங்கித் தான் மேன்மையோடு வாழ நேர்ந்தது என வா ன ம் ஆகிய மங்கை ஞான நோக்குடன் மானமா மிகவும் மகிழ்க்தாள் என்னும் இது இங்கே கினைந்து சிக்திக்க வுரியது. மயிர் சிறிது நீங்கிலுைம் உயிர் நீங்க நேரும் கவரிமான் போல் யாண்டும் எவ்வழியும் மானம் மரியாதைகளைச் செவ்வை யாப் பேணி வந்த இந்தக் குலமான் கணவன் கூறிய கொடு மொழிகளைக் கேட்டதம் அல்லலுழந்து அலமந்து துடித்தாள். கண்ணிர் வெள்ளம் பெருக உள்ளம் கருக உயிர் மறுகித் தரையை நோக்கித் தலை கவிந்து கின்றவள் தனது கிலைமையை நினைக்து கொக்து கெடிது கவித்தாள். கொடிய துயரோடு சிறை யில் உயிர்வாழ்ந்து வந்ததையும் முடிவில் நேர்ந்ததையும் சிந்தித்து கெடிய பரிதாபமாப் மறுகித் துடித்து செஞ்சம் பதைத்தாள்.