பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5364 கம்பன் கலை நிலை மருமங்களையும் உய்த்துணர்ந்து உறுதி நிலைகளை ஒர்ந்து கொள்ள வேண்டும். மனம் சலனமுடையது; யாரும் அறிய முடியாதது. படித்தவர் பலரும் இந்தப் பாடலில் வாதாடல் புரிகின்றனர். பெண்களின் கிலைமை நீர்மைகளைக் கூர்மையா ஒரின் யாவும் நேர் மையாம். பெண்ணின் மொழி எண்ணின் ஒளியா யிலங்கியுளது. பஞ்சமே பதயஸ்ளங்தி மஹ்யம் ஷண்டோபி ரோசதே புருஷாணும் அபாவோ ஸர்வா கார்ய: பதி வ்ர தா: எனக்கு ஐவர் பதிகளாயுள்ளனர்; ஆருவது ஒருவனையும் மனம் அவாவுகிறது; ஆடவர் யாரும் இல்லாத போதுதான் எல்லா மகளிரும் பதி விாதைகளாவர் என வடமொழியிலும் துரோபதை வாய்மொழி இவ்வாறு செவ்வையாய் வந்துள்ளது. ஒளதும்பாாணி புஷ்பாணி ஸ்வேதவர்ணம் ச வாயளம் மத்ள ய பாதம் ஜலே பச்யேந் 5 நாரீ ஹ்ருதய ஸ்திதம். அத்திப் பூக்களையும் வெள்ளேக் காக்கையையும் நீரில் மீன் பதத்தையும் காணினும் காணலாம் பெண்களின் இதய நிலையை யாரும் அறிய முடியாது என இக்கச் சுலோகமும் குறித்தளது. மெல்லிய இயல்பினர் ஆயினும் மகளிர் உள்ளம் ஆழம் மிக வுடையது; அவரது கிலேயைச் சரியா அறிய முடியாமல் கலையறி வாளரும் நிலை கடுமாறிக் கலை வணங்கி யுள்ளனர். Men have sight; women insight. [Victor Hugo) * ஆடவர் வெளி நோக்கினர்; பெண்கள் உள் நோக்கினர் என இது குறித்துளது. இருவகைப் பார்வைகள் கருத வந்தன. A woman’s heart, like the moon, is always changing, but there is always a man in it. [Punch] பெண்ணின் இதயம் சந்திரன்போல் எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருக்கிறது; ஆனல் அதில் ஒரு மனிதன் என்.றும் தங்கியிருப்பான் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. Women's thoughts are ever turned upon appearing amiable to the other sex. [Addison] பெண்களுடைய எண்ணங்கள் ஆடவரின் மனதுக்கு இனிய காட்சிகளா எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கின்றன என்.று அடிசன் என்பவர் இவ்வாறு முடிவாய்க் கூறியிருக்கிருர்,