பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 53.71 கற்புத் தீ. கற்பு அம்புத ஆற்றல் உடையது; அதன் எதிரே பஞ்ச பூதங்களும் அடங்கி ஒடுங்கி எவல் செப்கின்றன. நிலமும் நீரும் யுேம் காற்றும் வானும் அவர் கருதியபடி எல்லாம் உரிமையோடு மருவி நின்று ஊழியம் புரிகின்றன பெய் என்ருல் மழை பெய்கிறது. தாழ் என்ருல் தரை தாழ்கிறது. விலகு என்ருல் தி விலகிப் போகிறது. கில் என்ருல் காற்று கின்று விடுகின்றது. அடங்கு என்ருல் வானம் அடங்குகின்றது. தோன் ருதே என் ருல் சூரியன் தோன் ருமல் ஒளிகிருன். கொல்லாதே என்ருல் கொலைபுரியாமல் எமன் தலைவணங்கி அமைதியா அடங்கி ஒடுங்கி கிற்கிருன். இத்தகைய அதிசயங்களைப் பதிவிாதைகள் செய்து காட்டி யுள்ளனர். அவ்வுண்மைகளைக் காவியங்களும் புர ாணங்களும் தேசசரித்திரங்களும் சீவிய ஒவியங்களா உணர்த்தி வருகின்றன. கற்புடைய மங்கையர் அற்புத நிலைகளில் உயர்ந்திருத்தலால் அவரை எவ்வழியும் யாவரும் உவந்து துதித்து உரிமையோடு . பாராட்டுகின்றனர். தெய்வீக மகிமைகள் அவர்பால் செவ்வை யாப் நிறைந்திருக்கின்றன; ஆகவே எக் காலமும் னங்காடும் அவரைத் தக்கவாறு போற்றி மேன்மையா எத்தி வருகின்றன. முக்கணர்தண் டலைநாட்டின் கற்புடைமங் கையர் மகிமை மொழியப் போமோ ஒக்கும்ளரி குளிர வைத்தாள் ஒருத்தி வில்வேள் தனே எரித்தாள் ஒருத்தி மூவர் பக்கமுற அமுதளித்தாள் ஒருத்தினழு பரிதடுத்தாள் ஒருத்தி பண்டு கொக்கெனவே கினேந்தனேயோ கொங்கணவா! என்று ஒருத்தி கூறினளே. (படிக்காசர்) உத்தம பத்தினிகள் செய்துள்ள சில அதிசய நிலைகளே இது குறித்துள்ளது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. அநசூயை, சாவித்திரி, நளாயினி, வாசுகி, தமயந்தி, கண்ணகி முதலிய பதிவிரதைகளை மண்ணும் விண்ணும் எண்ணி