பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5396 கம்பன் கலை நிலை தலக்கி உரிமையுடன் உணர்த்தியருளினன். பரமன் அருள் புரிந்து மொழிக்க மொழிகள் பொருள் பொதிந்து தெருள் விரிந்து வந்தன. ஈசனுடைய வாசகங்கள் கேசு மிகுந்தன. ஆதலால் திவ்விய நிலைமைகள் செவ்விய தலைமையோடு தெரிய நேர்ந்தன. அவதார மருமங்களும் உபகார கருமங்களும் கருமங்களைத் தகவோடு வளர்க்க வந்தன; அக்க வகைகளை எல்லாம் நன்கு விளக்கி உயிரினங்களுக்கு அவை உவகைகனே விளேத்து அருளின. --- தசரதன் கண்டு களித்தது. பரகதியில் இருந்த தசரதனும் பரமன் அருளியபடியே வரமான தெய்வ விமானம் ஊர்ந்து இராமனை நேரே கான வக் தான். வான விதியில் வரும்போதே தனது அருமை மகனைக் கண்டு ஆனந்த பரவசனப் அருகே அடைந்தான். தேவ உருவில் மேவி வக்க தங்கையைக் கண்டதும் இராமன் வியந்து மகிழ்ந்து விரைந்து தொழு தான். உரிமை ப் பாசங்கள் பெருகி எழுந்தன. தனது அடியில் விழுக் து தொழுத அருமை மகனே உழுவ லன்போடு தழுவி எடுத்து மார்பில் இறுக அனைத்துக் கொண்டு உருகி நோக்கி யாதும் பேசாமல் பரவசமாய் கின்ருன். கண் களிலிருந்து வெள்ளம் பெருகி ஓடியது; அந்த ஆனந்தக் கண் னிரால் இராமனது சடைமுடியும் உடல் முழுதும் நனைந்து நீர் ஒழுக்காப் நிலவி கின்றன. அன்புரிமையால் என்பும் உருகியது. தன் பிள்ளையைத் தழுவி உள்ளம் மிக உருகி அவ் வள்ளல் கின்ற கிலே அங்கே கின்ற எல்லாருடைய உள்ளங்களையும் ஒருங் கே உருக்கி உயர்ந்த புத்திர வாஞ்சையை உன்னர்த்தி கின்றது. சீதையைத் தேற்றியது. கலைமகனைக் கழுவி உளம் உவந்து கின்ற தங்தை பின்பு மருமகளே அணுகினன். அணுகவே மாமன் எதிரே விழுந்து சீதை தொழுதாள் அக்குலமகளை உளம் உவந்து நோக்கி, 'அம்மா! நீ சக்கரவர்த்தினியாய்த் திருவயோத்தியில் பெரு மேன்மையோடு சுகமாயிருக்க வுரியவள்; கானகம் புகுக்க கடுந்துயர் உழந்துள்ளாப்! உனது துயரம் உயர் பெருந்தவமாய் ஓங்கியுள்ளது; வானகம் முழுவதும் உன்னைப் புகழ்ந்து போற்று கின்றது; உன்னுடைய புகழ் ஒளி எங்கும் பரவிப் பொங்கிய