பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5423 கானகம் வரும்போதே வில்லைக் கையில் எக்தி வந்தது வானகம் உய்யவேயாம். மானவீரன் கோலம் மகிமை தோய்ந்து வந்தது நீண்டகாலம் மூண்டு நீண்டிருந்த நெடிய இருளைச் சூரியன் நீக்கி அருளியது போல் சூரியகுலத் தோன்றலாகிய இராமன் ஈண்டு நெடிதாய் ஒங்கியிருந்த அல்லல்களை நீக்கி எல்லாருக்கும் ஆக்கங்களை அருளி யாண்டும் ஆனந்தங்களை நல்கி யிருக்கிருன். பொல்லாத தீயவர்களே வேர் அறுத்து நல்லவர்களுக்கு நலம் பல நல்கி இருத்தலால் வென்றிப் புரவலன் என வியன் பெயர் பெற்று கின்ருன். தனது வெற்றியால் புரக்கானும் கிரங் தரமாய் இனித வாழும்படி செய்துள்ளமையால் புரவலன் என்பது இக் கோமகனுக்கு இங்கே தனியுரிமையாப் கின்றது. புரத்தல் தொழிலைப் போர்த் தொழில் வெற்றி நன்கு புரந்து வந்தள்ளமையால் வென்றி விசேடமாப் ஒன்றி வந்தது. விர வள்ளல் எனச் ரோமன் விளங்கி வருகலால் இவனது வண்மை விரத் திண்மையால் விளைந்து வந்துள்ள உண்மையை உணர்ந்த கொள்கிருேம். எதிரியை வெல்லு முன்னரே இலங்கைத் தேசத் தை விபீடணனுக்கு வழங்கியது அதிசய விரக் கொடை யாப் விளங்கி கின்றது. கருமநீதிகள் தழைத்து வரவே இவ் விரன் யாண்டும் கூரிய நோக்குடன் காரியங்களை இழைத்து வருகிருன். யாவரும் எறி அமர்ந்து யாவும் ஆயத்தமான பின் எல்லா ரும் மானுட வடிங்களாய் மருவி மிளிரும்படி இராமன் கருதி யருளினன். வானா வீரரும் இராக்கக வேங்கனும் மானவராய் விளங்கி நின்றனர். உருவ நிலைகள் பருவ வர வுகளாயின. திருமால் இராமனப் அவதரிக்க நேர்ந்தபோது வானவர் : யாவரும் வானரங்களாய் முக்கற வந்தனர் ஆகலால் அவர் எல். லாரும் ஈண்டு மனிதராகவே இனிய வுருவங்களை எய்தி எழில் மிகுந்து விளங்கினர். மருவிய மாற்றங்கள் ஏற்றங்கள் எறின. . கன்னுடைய தேசத்தில் வாழுகின்ற சனங்கள் வியக் து விலகி வேறுபாடு கொள்ளாமல் உவந்து கயங் த உரிமை கொண் டாட வேண்டும் என்றே இவ்வாறு உருவங்கள் மேவும்படி இவ்விர நாயகன் விரும்பி யிருக்கிருன். காரிய சாதரியங்கள் வல்வழியும் செவ்விய நிலையில் சி ற ங் த சீரிய முறைகளில் நிறைந்து வந்தன. யாவரிடமும் பேருவகைகள் பெருகிகின்றன.