பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5427 சேதுவின் மகிமை. கடல் இடையே கண்ட நெடிய அணையைத் துணைவி யிடம் இத் தோன்றல் துலக்கிச் சொன்னது ஆன்ற அதிசயமாய் ஓங்கி வந்தது. அது உண்டான வகை ஓங்கி நீண்டுள்ள திறம் அதன் மகிமை மாண்புகளை எல்லாம் உரிமையோடு உரை த்தான். உரை களில் அரிய வினையாண்மைகள் பெரிதாய்த் தெரிய வந்தன. வானரேசர் தொகுத்தது இச் சேது. தோ! உன்னைப் பிரிந்து அல்லல் பல அடைந்த கானும் தம்பியும் கானும் மலைகளும் கடந்து வருங்கால் இடையே கிட்கிக்கை வேந்தன் நட்பு ஆன்ை; அவனுடைய சேனைகள் யாவும் துணையாய் வந்தன; இடையே கிடங்க கடலைக் கடந்த இலங்கை வருதற்கு வசதியாக அந்த வானாவிரர்களால் இந்த அணே கட்டப்பட்டது; இதன் காட்சி அரிய மாட்சியுடையது Εμl ன்.று திருவணையின் பெருமிக நிலைகளைச் சுட்டி விளக்கினன். பிரிய நாயகி பிரிந்துபோன பின் அரிய பெரிய காரியங்கள் நடந்துள்ளன; அந்த உண்மைகளை எல்லாம் அ வ் வு க் த மி உணர்ந்து கொள்ளும்படி இவ்வுத்தமன் உரிமையோடு உரைத்து வருகிருன். உரையாடி வரும் மொழிகளில் பரிவும் பண்பும் பெருகிப் பாசஉரிமைகள் மருவி கேசம் மீதுார்ந்து வருகின்றன. ஆழமான நெடிய கடலிடையே பாலம் கட்டிய து மிகவும் அரிய செயல் ஆகலால் அதனைச் செய்து முடித்தவர்களுடைய திறமைகளைத் தெரிய விளக்கினன். குரங்குகள் கூடிக் கட்டியது என்று கூருமல் வானரேசர் தொகுத்தது என்றது தன் சேனைகள் பால் இம் மானவீரன் வைத்திருக்கும் மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்தி நின்றது. எவ்வழியும் யாண்டும் கண்ணியமான மொழிகளே இப் புண்ணியமூர்த்தி வாயில் பொலிக்க வருகின் றன. இனிய மொழிகளைப் பேசி வருவதால் அந்த உள்ளத்தின் தனிமகிமைகளை உணர்ந்து தகைமைகளைத் தெளிந்து வருகிருேம். கட்டிய பாலத்தைச் சுட்டிச் சொன்னபின் அதன் மகிமை மாண்புகளை விளக்கிக் கூறினன்: வைதேகி இது வையமும் வானமும் புனிதம் அடைய வாய்ந்தது. இதனைக் கண் எதிரே கண்டவரே அன்றிக் கருதினரும் புண்ணிய சீலராப்ப் புத்தேள்