பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5444 கம்பன் கலை நிலை கோளரி என்பது கோள் அரி என்னும் இரண்டு மொழி களால் அமைந்தது. வலிமை மிகவுடையது, எதிரிகளைக் கொல்ல வல்லது என்னும் பொருளையுடையது. அருந்திறல் ஆண்மைகள் திருந்திய பெயர்களில் நன்கு உணர்ந்து கொள்ள வருகின்றன. அரிய வீரகேசரி பெரிய மாதவரைக் காணவே வானவிதி யிலிருந்து மாநிலத்துக்கு வந்தது. விமானத்தை விட்டு இறங்கி யது; போன்போடு சென்று முனிவரை வணங்கியது. வணங்க வே அந்த அருந்தவர் இந்தப் பெருக்ககையை வாரி எடுத்து மார்போடு அணைத்து ஆனக்க பரவசாாப் மோனமாய் கின்ருர். அன்பின் பெருக்கால் ஆனந்தக் கண்ணிர் பெருகி வந்தது. பின்பு சீதையும் இலக்குவனும் மாதவரைத் தொழு கனர். அவரை ஆதரவோடு நோக்கி அருள் சுரந்த ஆசிகள் கூறினர். :அண்ணலோடு சென்று அரிய காரியங்களை முடித்த உலகம் நலம் உற உதவிகள் புரிந்து வந்துள்ளமையால் புண்ணிய உருவங் களாய் நீங்கள் பொலிந்து விளங்குகிறீர்கள்” என்று சானகி தேவியையும் இளைய பெருமாளேயும் ஞான முனிவர் வியந்து புகழ்ந்தார். அவருடைய உரைகள் ஆர்வம் மீதுளர்ந்து வந்தன. உள்ளம் பேரன்பால் உருகிகின்றது. விழிகளில்நீர்வெளியாயது. உருகு காதலின் ஒழுகு கண்ணிரினன். இராமனது குடும்பத்தைக் கண்டபோது மாதவர் அன்பால் உருகி யிருக்கலை இது காட்டியுள்ளது) சிறக்க அ | ச கு ல க் கொழுந்துகள் உயர்ந்த சுகபோகங்கள் யாவும் துறந்தபோப் கிறைந்த துயரங்களை அடைக் த படாத பாடுகள் பட்டு உலகத் துக்கு நன்மைகளை விளைத்து வந்துள்ள அந்த உண்மையைக் கருதி உருகினமையால் முனிவருடைய கண்களிலிருந்து நீர் பெருகி வரலாயது. கண்ணிர் எண்ணிர்மையுடன் எழுந்தது. உள்ளத்தில் பெருகியுள்ள அன்புரிமையை விழி வழி வெளி யே ஒழுகிய நீர் தெளிவா விளக்கி நின்றது. ஞான சீலங்களில் உயர்ந்து தவயோகங்களில் சிறந்து இறைவனையே கருதி வங் துள்ள புனித உள்ளம் உருகி உவந்துள்ளமையால் மருவி கின்ற வர்களுடைய மகிமை மாண்புகளைத் தகவா அறிந்து கொள்ளு கிருேம், நேர்ந்த நிலை சேர்ந்தவரை ஓர்க் துஉணரச் செய்கிறது.