பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5445 எதையும் விரும்பாமல் உலக பாசங்கள் யாவும் துறந்த பெரியவர் இங்கே பரிந்து பாசம் கொண்டாடியிருப்பது வியந்து சிங்கிக்கவுரியது. பற்று அற்ருர் பற்றும் பற்று எனப் பரம்பொருளை ஒரு பெயர் பற்றியுள்ளது-இராமனைக் கண்டதும் பற்று அற்ற மாதவர் உள்ளம் உருகி உவகையில் திளைத்துள்ளார். அருந்தவர் அருந்தி மகிழும் அமுதத்தின் சுவை எனக் காவியத்தில் பல இடங். களில் இராமன் குறிக்கப்பட்டுள்ளான். அக்குறிப்புகள் யாவும்: ஈண்டுக் கூர்ந்து சிந்திக்க ஒர்ந்து உணர்ந்து கொள்ளக் கக்கன. பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன். இராமனைக் கண்டவுடன் பரத்து வாசர் கொண்ட உவகை கிலைகளை இதில் கூர்ந்து ஒர்க்க கொள்ளுகிருேம். அரிய இனிய அமிர்தம் பருகினவர்போல் பெரிய மகிழ்ச்சியை அடைந்துள் ளார். அந்த அதிசய ஆனக்கம் ஈண்டு மதி தெளிய வந்தது) வையமையல் நீங்கி மெய்யறிவு ஓங்கிஎ வ்வழியும் பரமனேயே கருதிவருகிற பெரிய மகான் இராமனை நேரே கண்டதும் ஆர் அமிழ்து உண்டவர்போல் உள்ளம் களித்து உவகையில் திளைத் திருக்கலால் உற்ற பொருளின் உண்மை நிலையை நாம் உய்த்து உணர்க்க உறுதி நலனே ஒர்ந்த தேர்ந்து கொள்ளுகிருேம். சக்கரவர்த்திக் கிருமகன் ஆகலால் மாதவர் இவ்வாறு ஆதி ரம் மீதார்க்க மரியாதை செய்துள்ளார் என்று வெளியே தோன் மறும் ஆயினும் உள்ளே ஒரு தெய்வ ஒளி ஊடுருவியுள்ளது. தத்துவ நிலைமைகள் விக்கக மருங்களாய் விரவி கிற்கின்றன. விமானத்தில் வந்தவர் அனைவரும் கீழே இறங்கினர். சுக் கிரீவன் அனுமான் அங்கதன் வீடணன் முதலிய தலைமைத் தனை வர்களை முனிவர்க்கு இராமன் அறிமுகப் படுத்தினன். எல்லா ரும் அவரைத் தொழுதனர். தொழவே யாவருக்கும் ஆசிகள் கூறினர். "எங்கள் வீர வள்ளலுக்கு உறுதித் துணைகளாப் கின்று உதவி புரிந்து வந்துள்ளமையால் உங்களுக்கு ஆண்டவன் அருள் உண்டாம்' என்று உரிமையோடு வாழ்த்து மொழிகளை வழங்கி யருளினர். அதன்பின் இராமனைச் சானகி கேவியோடு பன்ன சாலைக்கு அழைத்தச் சென்ருர். துறவிகள் எல்லாரும் புடை குழ்ந்து வேதமந்திரங்களை நீதிகியமமாய் செறியே ஓதி வந்தனர்.