5456 கம்பன் கலை நிலை குகன் நிலை. வான விதி வழியே இம்மான விரன் கூறிய மொழியைக் கேட்டதும் குகன் பேரானந்தம் அடைந்து மேலே நோக்கினன். நேரே யாதும் காணுேம்; வடதிசை நோக்கி விரைந்து போகிற விசித்திர வுருவத்தைக் கண்டு வியந்தான். பரிதாப நிலையில் பதைத் திருந்த அவனுக்கு வானிலிருந்து வந்த அக்க ஒலி ஊனில் உயிரைக் தந்தது போல் இருந்தது. மறுகி மயங்கினவன் பின் தெளிக்கான். மீண்டு வருவதாக உறுதி கூறிக் கானகம் போனவன் ஆண்டுகள் பல கழிந்தும் குறித்தபடி வரவில்லையே எ ன் று பெருத்த துயரோடு பேதுற்று உளைந்தான். இராமனை முன்னம் கண்டபோது சேர்ந்த அன்புரிமைகளையும் ஆர்வ மொழிகளையும் கருதி உருகினன். அந்த அழகனுடைய உருவ எழிலும் உரிமை யான இனிய வுரைகளும் உள்ளத்தை உருக்கி நின்றன. 'யான் வடதிசை வரும் அங்காள் நின்னுழை வருகின்றேன்.” (கங்கைப் படலம்,70) என்று இராமன் அன்று சொன்ன சொல்லை எண்ணி எண்ணி ஏங்கி எவ்வழியும் எதிர்பார்த்து ஏக்கம் உற்றிருந்தான். சமானேர் விழியாள் உடனே வனமுன் போனன் ஒருங்ாள் வருநாள் இலதோ? தேனே! அமுதே! தெளிவே! தெளிவின் ஊனே! உயிரே! உலகா ளுடையாய்! (1) வாழி மலைத்திண்டோஸ் சனகன் தன் மாமயிலே எழுலகம் ஆளும் இறைவன் மருமகளேத் தாழ்வில் பெருங்குணத்தாள் தானுன் கொழுந்திே தோழன் என உரைத்த தோன்றலார் தோன்ருரோ? (2) அம்பவளச் செவ்வாய் அணிகடகச் சேவகனே வம்பவிழும் சோலை வளர்கோ சலவள்ளல் எம்பெருமான் என்னே இழிகுலத்து நாயேனேத் தம்பி என உரைத்த தாசரதி தோன் ருரோ?” (3) இராமபிரான எண்ணிக் குகன் இன்னவாறு இன்னலோடு எங்கியிருக்கலால் அவனக அன்பும் பண்பும் ஆசையும் பாசமும் வெளியே தெளிவா அறிய கின்றன. வனம் போன அந்த மரகத
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/346
Appearance