பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.66 கம்பன் கலை நிலை அரிய வி: த சீலங்களையும் முனிவர்களும் ஞானிகளும் தவசிகளும் கருதியுணருக் கோஅம் பெரிதும் வியந்து புகழ்ந்து மகிழ்த்து வக் தள்ளனர். குண நலங்களால் மணம் மிகப் பெற்றன். தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளம் எனும் தகையான்; பரதன் எனும் பெயரான். (இராமா, குலமுறை, 21) விசுவாமித்திர முனிவர் பரதனைக் குறித்துச் சனக மன்ன னிடம் இன்னவாறு வியக் து புகழ்ந்திருக்கிருர் அருந்தவ நிலை யில் சிறந்த பெருத்தகவுடன் உயர்ந்துள்ள கோசிகர் பாகன இங் கனம் உவந்த கூறி யிருத்தலால் இவனுடைய புகழ் நிலைகளையும் உயர் தலைமைகளையும் ஒருங்கே நாம் உணர்ந்து கொள் ளுகிருேம்) திருமாலின் அமிச அவகாரம் என முகலில் பழமையின் பெருமை தெரிய கின்றது. பின்பு மனிதன் நிலையிலும் புனித நீர் மைகள் தோய்ந்த அரிய மகிமையாளன் என்பது அறிய வந்தது. இத்தகைய உத்தமன் எதிரே வந்து உழுவலன்போடு தொ GP-5 பணிக்க குகன் இவனுடைய விழுமிய நீர்மைகளை உணர்ந்து உவந்தான். வந்த காரியத்தைச் சிங்தை தெளியக் கேட்டான்.) அரசிளங் கோவே! படை பரிவாரங்களோடு தாங்கள் ஈண்டு எய்திய காரணம் யாது? அடியேன் அறிய விரும்புகிறேன்; அருள் புரியவேண்டும் என்று மிகவும் பணிவோடுவேண்டினன். 'முழுது உலகு அளித்த கங்கை முந்தையோர் முறையின் கின்றும் வழுவினன் அதனை நீக்க மன்ன&னக் கொணர்வான்'வந்தேன். குகன் கேட்ட கேள்விக்குப் பாகன் இவ்வாறு பதில் கூறி யிருக்கிருன். உரைகளில் மருவியுள்ள பொருள் நயங்களையும் மதி கலங்களையும் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும் என் தந்தை கிங்தையாய் ஒரு பிழை செய்ய நேர்ந்தார்; அத ல்ை எனது தமையனர் காட்டுக்கு வந்த விட்டார்; அந்தப் புண் னிய மூர்த்தியை மீண்டு அழைத்தக் கொண்டு போக வேண்டும் என்று ஈண்டு வந்துள்ளேன் என்று இளவல் இங்கனம் இயம்பி யுள்ளான். உள நிலை உரையில் தெளிவாய் விளங்கி நின்றது. (முந்தையோர் முறையின் நின்றும் தந்தை வழுவினன் என் மது மதிநலம் கனிந்த இனிய விசயமொழியாய் ஒளிமிகுந்துளது.