பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5482 கம்ப்ன் கலை நில ஒழித்துவேறு அவனிபண்டு ஆண்ட வேந்தரை இழித்துமேல் ஏறினன் தானும் ஏறினன். தோணியில் ஏறிய பாகனை உலகம் உவந்து காணக் கவி இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிருர் இக்குலமகனுடைய ஏற் மக்கை எவ்வழியும் போற்றி வருகிருர்; இவ்வழி இவ்வாறு ஏத் தியருளினர். அரிய குணநீர்மைகள் பெரிய மகிமைகளை விளைத்து வருகின்றன. உரிய மேன்மைகள் பிரியமா உணர சேர்ந்தன) - கள்ள ஆசையை ஒழித்தவன் எனப் பரதனை இங்கனம் வழுத்தியது அவனுடைய உள்ள கிலேமையை உணர்ந்துதெளிய, ஆசையை எவரும் எளிதே ஒழிக்க முடியாது; எல்லாரை, யும் அது ஆட்டி அலேக்க வருகிறது. குறைக்காற்றில் அகப் பட்ட செத்தைகளைப் போல் ஆசைச் சுழலில் சிக்கிச் சிவகோடி கள் யாண்டும் அலமந்து உழலுகின்றன. (க்ள்ள ஆசை என்றது உள்ளத்தைப் பறித்து உயிரைப் பாழ்படுத்தி வருகிற அதன் கொள்ளை கிலே தெரிய. குறிப்பு மொழி கூர்ந்து உணர வுரியது. பேரின்ப நிலையமான ஈசனை அடைய ஒட்டாதபடி ஈன வழிகளில் இழுக்க அலைத்துச் சீவனை நீசப்படுத்தி வருதலால் ஆசையின் காச நிலையை யாவரும் நன்கு அறியலாகும் - ஆசைஎனும் பெருங்காற்றுாடு இலவம் பஞ்சு எனவும் மனது அலேயும் காலம் மோசம்வரும்; இதேைல கற்றதும் கேட் -ஆம் ஆார்ந்து முத்திக்கு ஆன நேசமும்கல் வாசமும் போய்ப் புலனுயிற் கொடுமைபற்றி கிற்பர் அந்தோ தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே கிராசை யின்றேல் தெய்வம் உண்டோ? (தாயுமான வர்) ஆசையின் அழிகேடுகளைக் குறித்து வந்துள்ள இது ஈங்கு ஆராய்க் த சிக்திக்கத் தக்கது. இங்கப் பொல்லாத ஆசையால் எல்லா உயிர்களும் அல்லல்களே அடைந்து மாப்கின்றன. ஆசை ஒன்று ஒழிக்க அளவே சேங்கள் எல்லாம் அடியோடு ஒழிக் த போகின்றன; அந்த மனிதன் ஈசனை அடைகின்றன்.