பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5150 கம்பன் கலை நிலை திசைகளை வென்று தேவர் அசுரர் யாவரையும எளிதே அடககி அதிசய வீருேடு இறுமாந்து வந்தவன் ஒரு மனிதன் எதிரே இவ்வாறு அல்லலுழக்க உள்ளம் கனன்று உறுதி குலைந்து இறுதியை நோக்கி அறுதியிட்டுப் போராடுகின்ருன். இதற்கு முன் யாண்டும் யாரோடும் இப்படி அவன் மூண்டு போராடிய தில்லை. அவன் எதிரே காலனும் காலூன்றி நில்லான். முன்னம் இத்தனை போர் முயன்றிலன். என விண்ணுேரும் இங்கனம் வியந்து குறித்திருக்கலால் அன்று அவன் முனைந்து மூண்டு விரைந்து புரிந்துள்ள வெய்ய விரப் போரை இங்கு ஐயமின்றி அறிந்து கொள்ளுகிருேம்: இன்னவாறு உக்கிர வீரமாப் அ வ் ன் உருத்து அமராடி வருந்தோறும் இராமன் எதிர் ஏறி அவனை ஈடழித்த வங்கான்; பின்பு அவன் கெப்வாத்திரங்களைப் பெருவாரியாத் தொடுக் தான். கடுத்துக் கொடுத்தன யாவும் அடுத்து அடுத்து அழிந்து ஒழியவே அவன் விரைந்து அக்கினி யாத்திரத்தை எடுத்த மக் திர முறையோடு விடுத்தான். அது ஊழிக் கீபோல் யாண்டும் அனல் வீசி நீண்டு கொதித்து நேரே வேகமா மூண்டு வந்தது. வரவே அதனை வருளுத்திரத்தால் இராமன் அழித்து ஒழித்தான். பின்பு ம்யாத்திரக்கைக் கொடுத்தான்; அதுவும் மாய்ந்து மடிந்தது. அகன் பின் விஞ்சை மந்திரங்களோடு கூடிய வேறு பல பகழிகளையும் அவன் சீறி ஏவினன்; யாவும் நீருப் ஒழிக்கன. சக்கரம் கண்டு முதலிய அதிசயமான படைக்கலங்களையும் உக் கிரவேகமாப் விசி எறிந்தான். எல்லாம் நாசமாய் ஒழியவே அவன் உள்ளம் கொதித்தான். பொல்லாக மாயவேலைகளைத் தீய வழிகளில்தேர்ந்து ஒல்லையில் வல்லமையோடு செய்யசேர்ந்தான். இராவணன் செய்த மாயப் போர். தேர் மேல் கின்று நேரே பலவகை நிலைகளிலும் தலைமை யாப் வில்லாடல் புரிந்து வந்த இலங்கை வேங்கன் யாவும் அவல மாய் அழிந்து போகவே கவலையோடு கலங்க நேர்ந்தான். மாய வஞ்சமான தீய விஞ்சைகளைச் சிந்தனே செய்தான். தான் கரு தியபடியே காரியம் கைகூடும்படி வீர மாகாளியைத் தொழு தான். மாரகமான மந்திரங்களை ஓதி மாயப் பகழியை எடுத்த o