பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5157 கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி துண்டுளேத் துன் ஊசி விற்பாரின்---ஒன்ருனும் வேறல்ல பாண வியலூரன் வாய்மொழியைத் தேற எமக்குரைப்பாய் .ே (ஐந்திணை ஐம்பது, 21) தன் கொழுநன் வழுவான வழியில் போயிருந்தான்; அத ல்ை தலைவி புலவி கொண்டிருந்தாள்; அவனுக்கு இதமாக அவ னுடைய தோழன் வந்து தாது மொழிக்க போது அக்குலமகள் இவ்வாறு எதிர் மொழிந்துள்ளாள். அவர் மிகவும் நல்லவர்; மெய்யான ம்ொழியினர்’ என்று நீர் வந்து என்னைத் தெளியச் செய்வது கொல்லன் சேரியில் ஊசி விற்கப்போன ஒருவன் கதை யாகவே உள்ளது; உளவறிக்க எனக்கு உன் களவு தெரியும் என அவள் எள்ளி இகழ்ந்துள்ளமை உள்ளி உணர வந்தது. உண்மையை உணர்ந்து தெளிந்துள்ள நல்லவர்கள் எதிரே பொல்லாத புலைப்புன்மைகள் பொங்கி வந்தாலும் விரைந்து மங்கி மறையும் என்பது இங்கே நன்கு அறிய கின்றது. விர நாயகா நேரே போராட நேர்ந்த இலங்கை வேந்தன் வரபலத்தால் இந்தத் தீய பயங்கர மாயங்களைச்செய்திருக்கிருன். ஒளியைக் கண்ட இருள் போல் உன் பகழியால் 'இவை யாவும் அடியோடு அழிந்து கடி து ஒழிந்துபோம்” எனப் பாகன் விவே கமாய் விளம்பி யிருப்பது வித்தக விநயமா விளங்கியுள்ளது. நோய்க்கும் நோய்தரும் வினைக்கும் நின்பெரும்பெயர் கொடியின் நீக்குவாய்! வெவ்விய மாய சாலங்களாப் பாண்டும் விரிந்து கிற்கின்ற கிருதர் படைகள் யாவும் ஒரு கொடியில் ஒழிந்து போம்; விரைந்து அம்பு தொடுங்கள் என்று கூறுகின்ற சாரதி இவ்வாறு கூறி யிருக்கிருன். காரக மந்திரத்தின் தகுதி தெரிய வந்தது. ராமா என்று உன் பெயரை ஒருமுறை சொன்னல் சீவர் களுக்கு சேர்ந்த துயரங்கள் யாவும் நீங்கிப் போம்; அவ்வாறு நீக்கியருளுகின்றபேரைச் சீராகவுடைய நீ மாருன இந்த மாயத் தோற்றங்களை நீக்குவது எப்படி? என்று என்னிடம் கேட்பது எனக்குப் பெரிய வியப்பாயுள்ளது என்று சாரதி சதுரோடு கூறியிருக்கிருன். இதல்ை அவனது பேரறிவு தெரிய சேர்க்கது.