பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5160 கம்பன் கலை நிலை பிறத்த லாற்றுறு பேதைமை பிணிப்புறத் தம்மை மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது.அம் மாயம். s2 சமர பூமியிலும், வான விதியிலும் கொடிய பயங்காங் களாய்த் தோன்றி நின்ற நெடிய மாயச் சேனைகள் யாவும் இராமன் கொடுத்த ஞானத் திரத்தால் ஒரு கொடியில் அடி யோடு ஒழிந்து போயின. அந்தப் போக்கை நோக்கி யாவரும் அதிசய பரவசராப் இந்த வீரனைத் துதி செய்து தொழுதனர். அபாயம் மூண்டது என்று நெடிய திகில் கொண்டு நெஞ் சம் கலங்கி அஞ்சி அலமந்த அமரர் எல்லாரும் அஞ்சன வண் ணன் அம்புத வில்லாடலை எண்ணி எண்ணி வியந்தனர். இமை யவர் உலகம் முழுவதும் உவகையில் ஓங்கி ஒளி பெற்று கின்றது. கான் மறை இறைஞ்சவும் தொடரவும் சேயோன். இராவணன் செய்த தீய மாயப் போரை மாய்த்து ஒழித்தவன் பாவன்? என்பதை இவ்வாறு சுவையாக விளக்கியிருக்கிரு.ர். வேதங்களும் உபநிடதங்களும் ஒதிஓதி உணர்ந்தும் யாதும் ചങ്ങ முடியாக ஆதிமூலப் பொருளே இவ்வாறு மானுட வுருவம் தாங்கி இராவணளுேடு நேரே போராடுகிறது எனச் ேேராடு தெளித்திருக்கிருர். தெய்வ ஒளி தெளிய வந்தது வேத முடிக்கு எட்டாதவன் வேந்து முடியும் துறந்து வையம் உய்யும்படி வெய்ய விேனைகளே வேரடிக்க நேர்ந்துள் ளான். சேயோன் என்றது மாயோன் நிலையை மருவி வந்தது. யாரும் அணுகமுடியாத நி லை யி ல் அகன்றுள்ளவன் எ வரும் எளிதே காண வெளி வந்து அரிய தொழில்கள் புரிகின்ருன். மறையின் அந்தமும் தொடாததாள் மண்ணிடைவந்து துறைதொஅம்பல துாயகல் நெறிகளேத் துலக்கிப் பொறையும் திேயும் பொலிவுறப் போர்புரிந் தருளும் இறையை எண்ணுவார் எண்ணரும் பிறவி தீர்ங் தெழுவார் என்னும் இது ஈண்டு எண்ணி உணர வுரியது. மாயையின் மாய்ந்தது அம் மாயம். இராவணனுடைய மாயப் படைகள் மாய்ந்து தொலைக்க நிலையை இங்கனம் உவமையால் தெளிவாக்கி உணர்த்தி யிருக்கிருர்: