பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5179 தவம் மிகவும் சிறந்தது; அதிசய நலங்களை அது உங்களுக்கு இனிது அருளும்; அரிய பெரிய மகிமைகளை அதனல் எளிதே பெறலாம்; அதனை உரிமையோடு செய்து உயர்ந்து கொள்ளுங் கள் என மானிடர்க்கு ஒரு ஞானபோதனையை ஈண்டு நல்கி யிருக்கிரு.ர். போதிக்கும் திறம் புலமை பொலிந்துள்ளது கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (குறள், 269) தவத்தால் எமனையும் கடக்கலாம் என இது குறித்துள்ளது. பிறப்பறி யார் பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்; மறப்பில ராகிய மாதவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் ருரே. (திருமந்திரம்) தவந்தனில் மிக்கது.ஒன் றில்லை; தாவில் சீர்த் தவந்தனே நேர்வது தானும் இல்லையால்; தவங்தனில் அரியது.ஒன் றில்லை; சாற்றிடின் தவந்தனக்கு ஒப்பது தவமது ஆகுமே. (கந்தபுராணம்) எவ்வகைப் பொருள்களும் ஈய வல்லது செவ்விய தவமதே தெரியின் வேறிலே; இவ்வுல கத்திலஃ தியற்று கின்றதே உவ்வுடல் எடுத்தபேர் உறுதி என்பவே. (திருக்கூவப்புராணம்) உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தால் நோக்கி உயர்ந்தான் நூல் ஒதி ஒடுங்கி-உயர்ந்தான அருந்தவம் ஆற்றச் செயின் விடாம் என் ருர் பெருந்தவம் செய்தார் பெரிது. (ஏல. ஆற்றல் வகையால் அருந்தவம் மேற்கொண்டு நோற்று நுனித்தல் ஒழுக்கம் தலைகிற்றல் போற்றி யுரைத்தல் புகழ்ச்சி நிகழ்வி: து ஏற்றும் இருவிசும்பு ஈர்மலர்த் தாரோய் ! (சூளாமணி , கதிர்விடு திருமணி அங்கை கொண்டது ஒத்து எதிர்வதும் இறந்ததும் எய்தி கின்றதும் அதிர்வறு தவவிளக்கு எறிப்பக் கண்டவன் பதரறு திருமொழி பணிக்கும் என்பவே. (சிஃக் காணி)