பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.188 கம்பன் கலை நிலை ஒர்ந்து வருகிருேம். மானச நீர்மைகள் கருமங்களோடு தழுவிக் கரும வீரங்கள் கெழுமி அதிசய மருமங்களாய் மருவியுள்ளன் அறம் உன்னுவான். சரியான சமையம் வாய்த்தும் பகைவனே க் கொல்லாமல் வில்லைத் தேர்த்தட்டில் ஊன்றிக் கொண்டு இவ்விர வள்ளல் கின்றதற்கு உரிய காரணத்தைப் பூரணமா இது வரைந்து காட்டி யுள்ளதுதாய சிக்தனை வெளியே தெளிவாக் துலங்கி கின்றது. மாயவஞ்சங்கள் பல புரிந்து திய துயரங்களைச் செய்து திமிர் கொண்டுள்ள பொல்லாதவன் ஆஇைம் போரில் அல்லல் உழந்து செயல் இழந்து கிற்கின்ருன் ஆகலால் அவனைக் கொல் லுதல் கூடாது என்று இக் குலமகன் கருதியிருக்கிருன். அங்கக் கருத்து கருமத்தோடு கலந்து கின்றுள்ளது. அவ்வுண்மை அறம் உன்னுவான் என்ற கல்ை அறிய வந்தது. உன்னுதல்=உள்ளத் தில் ஊன்றி கினைத்தல். எண்ணியது புண்ணியமாயது. புத்த கருமத்தோடு தனது குலதருமமும் இக்குலமகனிடம் கிலை பெற்றுள்ளமையால் கொடிய பகைவனிடமும் இ னி ய பரிவு காட்டியருளினன். இந்தப் புனித வீரனது பெருக்தன்மை மனித சாதிக்கு மகிமை சுரக்க மாண்பு புரிந்துள்ளது கன்பால் வக் கடைந்த ஒரு பறவையைப் பாதுகாத்தற்குத் தனது உயிரையும் உதவிய சிபி யின் வி ழு மி ய வழிமுறையில் தோன்றிய தோன்றல் ஆகலால் எதிரி படைக்கலம் இழக்க பின் தன் பால் அடைக்கலம் அடையினும் அடையலாம்; அவ்வாறு அடையின் அவன் ஆருயிர் உய்க்க பிழைக்கட்டும் என இவ் வாடி எண்ணியே அம்பு எய்யாமல் அன்பு செய்து கின்ருன். எதிரியை எளிதே வெல்லவல்ல அமையம் அமைந்திருந்தும் அதுசெய்யாமல் இராமன் அமைதியாய் நிற்பது சாதிக்குப் பெருவியப்பாயது. 'அரசர் பெரும அவன் தளர்ந்தான் என்று தண்ணளி புரியலாகாது; கிளர்ந்து எழுந்தால் கொடிய கேடுகள் செய்வான்; பகைவனே முடிய ஆாறுவதே விரகருமம்; நேரத்தைச் சோர விடாமல் விரைந்து வெற்றி பெறுவதே நலம்’ என இவ் வா.ணு மாதலி ஆதரவோடு காரணம் காட்டிக் கூறினன்.