பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5870 கம்பன் கலை நிலை னிடம் தந்து சமாதானமாப் வாழ வேண்டுகிறேன்; இதுவே எனது முடிவான வேண்டுகோள்” என்று மு. டி. த் து வி ட் டு விரைந்து போர்க்களம் புகுந்தான். இவனுடைய நேர்மை நீர்மை களை வினவி அறிந்து இராமன் இரங்கினன். 'உன்னேடு சேர்ந்து * கொள்ள விரும்பினுல் உன் கமையனே அழைத்து வா’ என்று விடணனை அனுப்பினன். அவன் வந்த அடியில் விழுக்க தொழு தான்; உழுவலன்போடு அவனைக் கழுவிக் கொண்டு இவன் உருகி அழுதான். பரிவுரைகள் கூறினன்: 'தம்பி! நீ நல்லவன்; நீதிமான்; பல கலைகளையும் ஒதியுணர்ந்தவன்; சிறந்த மதிமான்; பிறந்தது முதல் யாதொரு துேம்புரியாமல் உயர்ந்த கருமவானப் வளர்ந்து வந்துள்ளாப், தீயவர்களை வெறுத்த விலகித் தாய ஒரு கருமவீரனிடம் போய் நீ சேர்ந்து கொண்டதை நினைந்து நான் உள்ளம் உலந்துள்ளேன்; நீ ஏன் இங்கு வந்தாய்? அண்ண லுக்கு நீ போதித்த தபோல் நானும் எவ்வளவோ நீதிமுறைகளை ஒதினேன்; உத்தம பத்தினியை விட்டுவிடு என்று புத்திமதிகளைப் போதித்தேன்; யாதும் கேட்கவில்லை; அழிவு காலம் மூண்டுள் ளமையால் அவகேடனப் நீண்டு கிற்கின்ருன்; என்னை வளர்த்து வாலிபம் ஆக்கிவிட்ட அவனுக்காக என் உயிரைக் கொடுக்கவே ஈண்டு நான் வந்திருக்கிறேன்; நீ ஒதுங்கி நிற்பது நல்லதே; குலத்தியல்பு குன்றிலுைம் புலத்தியன் வழி உன்னல் புனிதம் அடையும் என்று இனித மகிழ்கின்றேன்; உன் கிலைமைக்கு 庶 விலகினது சரியே; என் தலைமைக்கு அது தகாத; மானமும் வீரமும் என் மெய்யுயிர்கள்; அவை காழ நான் வாழேன்; ஆன வரையும் பொருது மடிவேன்; நீ விரைந்து மீண்டுபோய் ஆண்ட வனே அடைந்த கொள்' என்று இன்னவாறு கூறி இளையவனே அனுப்பிவிட்டுத்தேரில் ஏறிப் போரில் நேரே மூண்டான். இவன் மூண்டு போராடவே வானரங்கள் பல ம | ண் டு மடிந்தன; சேனைத் தலைவர்கள் எல்லாரும் அல்லல் பல அடைந்தனர்; சுக்கி ரீவனும் இவ்வுக்கிர விரனிடம் அகப்பட்டு உயிர் பதைத்துத் துடித்தான்; இராமன் விரைந்துவக்க அவனே மீட்டியருளினன்; கடும்போர் மூண்டது; அடலாண்மைகளோடு மூண்டு போராடு கின்ற இவனுடைய அதிசய நிலைகனைக் கண்டு கோதண்ட வீர லும் வியந்தான்; நீண்டநேரம் உக்கிர வேகமாப் வில்லாடல்கள் புரிந்தான்; எல்லையில்லாத பானங்களோடு எதிராடல் புரிந்து