பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . அவர்கள், கந்தர் சஷ்டி விழாவின் ஆறு நா ட் க ளி லும் அடிகளார் தொடர்ந்து நிகழ்த்திய சொற்பொழிவு களைக் குறிப்பெடுத்துத் தொகுத்து கந்தர் சஷ்டிச் சொற் பொழிவுகள்' என்னும் பெயரில் ஒரு தனி நூலாக வெளி யிட்டுள்ளார்கள். இப்படி வந்த சில வெளியீடுகளே அடிகளாரை உலகிற்கு நினைவுபடுத்திக் கொண்டுள்ளன. அடிகளார் தாம் நூலியற்றி அச்சிட்டிராவிடினும், பழைய நூல்கள் சிலவற்றை அச்சிற்பதிப்பித்துள்ளார்கள் : சில நூல்களைப் பிறர் பதிப்பிக்கவும் ஏற்பாடு செய்துள் ளார்கள். அடிகளார் தாமே பதிப்பித்துள்ள நூல்களுள். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் போன்றவை குறிப்பிடத் தக்கவை. - அடிகளார் மறைவு இவ்வாறு பல்வேறு வகையிலும் மக்கட்கு அருட்பணி புரிந்து வந்த அடிகளாரின் மறைவு எதிர்பாராது திடீரென நேர்ந்தது. அடிகளார் 1941-ஆம் ஆண்டின் பிற்பகுதி யில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து தி ரு க் ேக | வ லூ ர் போந்து ஆங்குள்ள அறப்பள்ளியில் சிறிது காலம் தங்கி யிருந்தார்கள்; அன்பர்களின் வேண்டுகோட்கிணங்க அங் கிருந்து கார்த்திகை தீப விழாவிற்காகத் திருவண்ணுமலை சென்று சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றினர்கள்; அங் கிருந்து திருச்சிராப்பள்ளி சென்று 1941 டிசம்பர் 25, 26, 27-ஆம் நாட்களில் நடைபெற்ற சைவசித்தாந்த மகா சமாசத்தின் முப்பத்தாரும் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி அரிய அருளுரை வழங்கினர்கள். அங்கிருந்து பழநிக்குப் புறப்பட்டார்கள்; 23-1-1942-இல் பழநியை அடைந் தர்கள். பழநி சைவ சித்தாந்த சபையின் ஆண்டுவிழா