பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 6 தொடர்ந்து சொற்பொழிவாற்றிஞர் என்பது வியப்பா யுள்ளது-என்று மருத்துவர் கூறியுள்ளதை நோக்கின், அடிகளார் நாட்டிற்குச் செய்துவந்த நற்பணி எத்தகைய தென்பதை நுனித்துணரலாம். அடிகளாரின் பிரிவறிந்து துடித்த நாட்டு மக்களின் துயரத்திற்கு அளவேயில்லே. பாராட்டுரைகள் அடிகளாரின் ஆழ்ந்த புலமை, சொல் லா ற் ற ல், சமயவேறுபாடின்மை, கல்விப்பணி, நல்லொழுக்கம், இறைநெறி வளர்த்தல், தமிழ்த் தொண்டு, அற . றி பரப்புதல், அருள் உள்ளம் முதலியவை காரணமாக அடி களாரைப் பாராட்டாதவர் இல்லை எனலாம். அடிகளார் பட்டத்திற்கு வந்த ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா "ாகிய பொன்விழாவிற்கு வாழ்த்து அனுப்பியவர்களுள். திராவிடர் கழகத் தலவர் பெரியார் ஈ. வே. இராமசாமியவர் களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிகளார் இருந்தபோதும்-இறுதியெய்திய பின்னரும் அவர்களைப் பாராட்டி எழுதியிருப்பவர்களுள், திரு. வி. க., பண்டித மணி, மு. கதிரேசச் செட்டியார், கே. கோதண்டபாணிப் பிள்ளே, இராசா. சர். அண்ணும8ல் செட்டியார், டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர், ச. வையாபுரிப் பிள்ளை, சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார், ந. மு. வேங்கடசாமி நாட் டார், கவியரசு. வேங்கடாசலம் பிள்ளை. கோவல் வடி வேல் முதலியார், தெ. பொ. மீட்ைசி சுந்தரனுர், கி. ஆ. பெ. விசுவநாதர்ை, சுதந்திரா கட்சித் தலைவர் காரைக்குடி சா. கணேசனர், கல் கி. ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி, மு. இராசாக் கண்ணனர், க.வெள்ளை வாரணனர் முதலி யோர் குறிப்பிடத் தக்கவர்கள். . இவ்வளவு மாபெருஞ் சிறப்பிற்குரிய ஞானியார் அடி களாரின் திருவுருவத் தோற்றத்தை நாம் காண வேண்டு மல்லவா?. அதனப் பின் வரும் படத்தில் காணலாம்.