பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிகளாரை நேரில் பார்த்தால், பார்த்துக்கொண்டே யிருக்கலாம்போல் தோன்றும். அடிகளாரின் திருவுருவப் பொலிவையும் பல்வேறு சிறப்புக்களையும் குறித்து, தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ள பாராட்டுரையிலிருந்து சிற் சில பகுதிகள் வருமாறு: ......... முருகன் சேவடி வருடி உருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்வுைம், தண்மை பொழி யும் செவ்விய நோக்கும்,வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும், பொன்னுெளிரும் மணிமார்பும், கருமைக்கதிர் விரிக்குந் தி ரு ேம னி யு ம் சண்முகா-சண்முகா என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என்னுள் ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையுங் கவரும்: எ வர்க்கும் எளிதில் இன் பூட்டும் ஞானியார் சுவாமிகள் மாளுக்கருக்குப் பாடஞ் هة و ه ه ده هه சொல்லும் போதும், சொற்பொழிவு நிகழ்த்தும் போதும் தொல்காப்பியனராகவும், நற்கீர ராகவும், திருவள்ளுவ ராகவும், இளங்கோ அடிகளாகவும், கச்சியப்பராகவும், கம் பராகவும், சேக் கிழாராகவும். வியாசராகவும், நீலகண்ட ராகவும், சிவஞான முனிவராகவும் , பிறராகவும் முறை முறையே விளங்கி விளங்கி இலக்கிய இலக்கணச் சாத்திர நுட்பங்களே வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டுப் புலவ ரான வர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன் ருே?......... ........ சுவாமிகளின் பேச்சுத்திறனே எதற்கு ஒப்பிடு வது? கடல் மடைத் திறப்புக்கா - வெண்கலக் கோட்டை