பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 சொல்லிக்கொண்டு போவார்கள். ஆளுல் சுவாமிகள் பேச்சு இப்படியல்ல. அவர்கள் பிரசங்கத்தைப் படித்தவர்களும் ரசிப்பார்கள்; பாமரர்களும் விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்வார்கள். மணி மணியாக, முத்து முத்தாக சுவாமிகள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் மனதில் என்றும் அழியாதவாறு பதிந்துவிடும். எப்படிப்பட்டி சிக்கலான சமய உண்மையையும் சிக்கறுத்துச் சொல்வார்கள். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும்’ - என்னும் கவியின் வாக்கை சுவாமிகள் சொற்பொழி வுகள் மெய்ப்படுத்தும். ரீ ஞானியார் சுவாமிகள் திருப்பாதிரிப் புலியூர் மடாதி பதியாகி இந்த மாதத்தோடு ஐம்பது வருஷங்கள் பூர்த்தி யாகின்றன. இந்த ஐம்பது வருஷ காலத்தில் சுவாமிகள் ஆயிரக்கணக்கான சமயப்பிரசங்கங்கள் செய்திருப்பார்கள் • * * * * * * * * * * * எவ்வளவோ பேருடைய வாழ்க்கையைத் தமது உபதேசங்களால் புனிதப்படுத்தி யிருப்பார்கள் சுவாமிகள் சமயப்பணி செய்வதுடன் தமிழ்ப் பணியும் செய்து வருகிருர்கள். எத்தனையோ பேருக்குத் த மி ழ் அன்பையும் தமிழ் அறிவையும் ஊட்டியிருக் கி ருர் கள். அரசாங்க உதவியின்றி ஒரு தமிழ்க் கல்லூரியும் நடத்தி வரு கிருர்கள். ஸ்வாமிகளின் தமிழன்பு, தமிழ்ச் சுவையின் அனு பவ உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது . ......” மேலுள்ளாங்கு, கல்கி. கிருஷ்ணமூர்த்தி, திரு. வி. க. போலவே உண்மையான ஞானியார் அடிக8ளப் படம் பிடித் துக் காட்டியுள்ளார். அடுத்து, அண்ணுமலேப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலவராயிருந்த முதுபெரும்