பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&3、 திலகவதி அம்மை துதி (அடிகளார் அருளிய திலகவதி அம்மை துதி” என்னும் நூலிலிருந்து மூன்று பாடல்கள்:-) (ஆசிரிய விருத் தம்) : 1. உலகமெலாந் திருநீற்றின் ஒளிவிளங்க மணிவிளங்க உவகை யோடும் பலகலைசொல் ஐந்தெழுத்து விளங்கவரன் பெயர்விளங்கப் பான்மை யோடு தலம்விளங்க மறைவிளங்க அப்பருக்குத் திருநீறு சாற்றித் தந்த திலகவதி அம்மையார் அடிக்கமலம் இரண்டினையுஞ் சிரத்திற் சேர்ப்பாம். 2. நீயிலையேல் சைவமெனுஞ் சமயமெங்கே அப்பரெங்கே நேய மெங்கே கோயிலையாம் அடைவதெங்கே குறிக்கோளுங் கொள்வதெங்கே குருதா னெங்கே காயிலைவேற் பரசினத்தாங் கர்னெங்கே தேவாரங் கருத லெங்கே மாயிருஞா லம்போற்றுந் திலகவதி நின்னடியை வணங்கி வாழ்வாம். 3. அப்பருமே நினையடைந்து மாசொழிந்தார் நோயொழிந்தார் அளவில் சீர்த்தி செப்பருந்தே வாரஞ்சொல் திறம்பெற்ருர் சிவஞானத் திறம்பெற் றுய்ந்தார் ஒப்பதிக மில்லாத இறைநாவுக் கரசென்ன ஒதப் பெற்ருர் எப்பொழுதும் உனை நினைத்துத் திலகவதி யம்மை நலம் எய்தி வாழ்வாம்.