பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானியார் சுவாமிகள் அறிமுகம் முப்பது ஆண்டுகட்குமுன் தமிழ் நாட்டில் ஞானியார் சுவாமிகள்’ என்ருல், சிறுவர் முதல் முதியோர் வரைகற்றவர் கல்லாதவர், தொழிலாளர் அ ர ச | ங் க உயர் அலுவலர், ஏழையர் செல்வர் முதலிய பலரும் அறிவர். அருள்மிகு சமயத் த ல வ ர யு ம் கற்றுத்துறைபோகிய பெரும் புலவராயும் தலைசிறந்த பேச்சாளராயும் திகழ்ந்த திருவருட் செல்வர் ஞானியார் அடிகள். அவர்களிடம் முறையே பாடங்கேட்டுப் பெ ரு ம் புலவரானவர்கள் நூற்றுக் கணக்கானவர். அடிகளாரின் சொற்பொழிவுகளைக் கேட்டுப் புலமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர். அவர்தம் அருளுரைகளைச் செவி மடுத்து நல்லறமும் நல் லொழுக்கமும் உடையவராய்த் திகழ்ந்தவர்கள் நூருயிரக் கணக்கானவர்கள் . தமிழிலும் வடமொழியிலும் மிக்க புல மையும் ஆங்கிலத்தில் போதிய திறமையும் பெற்றுத் திகழ்ந்தவர் அடிகளார். கேட்டவர் உள்ளங்களைத் தம்பால் ஈர்த்துப் பிணித்து, நான்கு மணி நேரம் - ஐந்து மணி நேரம்