பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதவு திறந்தது 95

ஹரிக்கு இன்னும் சொல்லிக் கொடுக்கிற அளவுக்குப் போதாது. கொஞ்ச நாள் போகட்டும், பார்க்கலாமே’ என்று கூறி அனுப்பிவிட்டார்.

காந்தாமணியும் அவள் தாயும் அழமாட்டாக் குறை யாகப் புறப்பட்டுச் சென்றார்கள். சுசீலாவுக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஹரியையாவது ஏற்பாடு செய்யுங்கள்’ என்று காங்காபாய் கேட்டதற்கு அப்பா சரி’ என்று சொல்லி விடுவாரோ என்று அவள் கவலைப்பட்டாள். ஏனோ தெரியவில்லை, சுசீலாவுக்குக் காந்தா மணியைக் கண்டதுமே பொறாமை. இப்போது காந்தாமணி ஏமாற்றமடைந்து சென்றதில் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

லட்சுமியம்மாளுக்கும் காயத்திரிக்கும் இந்த விஷயத் தில் பாகவதரிடம் சிறிது வருத்தந்தான். இவ்வளவு ஆசையோடு வீடு தேடி வித்தையை யாசிக்கிறவர்களுக்கு நிர்த்தாட்சிண்யமாக இல்லை என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? பணம் காசை லட்சியமில்லாமல் கொட்டிக் கொடுக்கிறவர்களுக்கு இல்லாமல் பின் யாருக்குத்தான் இந்த வித்தை? சாப்பாட்டுக்கு இல்லாதவனா கச்சேரிக்குக் கப்பிட்டுக் காசும் பணமும் அள்ளிக்கொடுக்க போகிறான்? என்ன இருந்தாலும் இவ்வளவு நல்ல மனிதர்களை உதறித் தள்ளியிருக்க வேண்டாம்’ என்றே லட்சுமியம்மாளுக்குத் தோன்றியது. ஆனால் அதைக் கணவரிடம் கூறத் தைரிய முமில்லை; விருப்பமுமில்லை.

பாகவதற்கு மட்டும் திருப்தி, ஹரியை பெரிய கண்டத் திலிருந்து மீட்டுவிட்டோம் என்பதுதான் அது.

அவனைப் பிறகு தனியாகக் கூப்பிட்டுக் கேட்டார்: * உன்னை அவர்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கக் கூப்பிட்டார்கள். ஏராளமாகப் பணமும் காசும் கிடைக் கும். ஆனால் உன்னை நான் அனுப்ப இஷ்டப்படவில்லை.