பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதவு திறந்தது 97’

யானத்துக்கு மேல் திருவிடைமருதுரருக்குப் போகலாமென்று இருக்கிறேன். சுந்தரி உன்னைப் பார்க்க வேண்டும் என்றாள். நீ அங்கே வந்து ரொம்ப நாளாகிறதே! இன்று சாப்பாட்டுக்கு மேல் இரண்டு பேருமாகப் போய் வருவோம்’ என்று சொன்னார்.

பாகவதர் வெளியே போனதும் சுசீலா ஹரியை வம்புக்கு இழுத்தாள். அம்மா, இனிமேல் ஹரிக்குத் திருவிடைமருதூர் வேலைதான் சரியாக இருக்கும். அங்கேயும் புருஷத்துணை வேண்டாமா? ஏன் ஒரு வழியாக அவனை அங்கேயே வேலைக்கு அமர்த்திவிட்டால் என்ன? : என்று கேலியும் கிண்டலுமாகப் பேசியபோதே லட்சுமி ‘யம்மாள் பெண்ணைக் கண்டித்தாள். “ -

‘ வர வர உனக்கு நாக்குத் துளிர்த்துவிட்டது. கொஞ்சங் கூட மட்டுமரியாதை இல்லாமல் பேசுகிறாய். அப்பா காதிலே விழுந்தால் உன் தோலை உரித்துவிடுவார். பேசாமல் உள்ளே வந்து காரியத்தைப் பார்; இல்லாவிட் டால் கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடியைப் பார்க்கப் போய்ச் சேர்’ என்றாள்.

சுசீலாவுக்கும் இப்போதுதான் அது எத்தனை பெரிய விஷயம் என்று புலனாகி உடம்பில் உறைத்தது. அயினும் அவள் அதை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. இப்போது நான் என்ன அம்மா சொல்லி விட்டேன்; பெரிதாகப் பயமுறுத்துகிறாய் ?” என்று பதிலுக்கு இரைந்தாள்.

அம்மா ஒன்றும் பயமுறுத்தவில்லை. இந்த வீட்டிலே நீதான் எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறாய். திருவிடைமருதூர்ச் சித்தியைப் பற்றியும், வசந்தியைப் பற்றியும் பேச்சே எடுக்கக்கூடாது என்று அப்பா உனக்கு எத்தனை தடவை சொல்லியிருப்பார்? இதற்காக எவ்வளவு திட்டும் வசவும் வாங்கியிருப்பாய்?’ என்று காயத்திரி கூறி முடிப்பதற்குள் சுசீலா அக்காவிடம் சீறிப் பாய்ந்தாள்.