பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'98 புல்லின் இதழ்கள்

“ஆமாம், பெரிய சித்தி! உனக்கு இதையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொண்டிருப்பதுதானே வேலை? ஹரியைப் பற்றி நான் ஏதாவது பேச வாயைத் திறந் தால், ஈசல் மாதிரி எல்லாரும் வந்து விடுகிறீர்கள் சண் டைக்கு. யார் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன? போய்க் குஷியாக வசந்தியைா பார்த்துக்கொண்டே இருக் கட்டும்’ என்று கூறிய சுசீலா அங்கே ஒரு நிமிஷங்கூட நிற்காமல் மாடியை நோக்கிச் சென்று விட்டாள். அப்

போது, ‘ என்ன இங்கே இரைச்சல்’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த பாகவதர் ஹரியைக் கூப்பிட்டு, ‘இன்று திருவிடைமருதூர் புரோகிராம்

கான்சல்’ என்று கூறிக்கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.