பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. நிதி சால ஸ்-கமா?

ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியக் கிராமங்களில் சுவாமிமலை என்னும் சிற்றுாரும் ஒன்று. குன்றுதோராடும் குமரன், குருநாதனாக வந்து குடிகொண் டிருக்கும் ஆறுபடை வீடுகளில் இந்தப் புண்ணியஸ்தலமும் ஒன்று.

காவிரி ஆற்றின் செழுமையை மூலதனமாகக் கொண்டு இருமருங்கிலும் செழித்து வளர்ந்த தென்னஞ் சோலைகள்: கண்ணைக் கவரும் இயற்கை அழகோடு கொஞ்சிக்கொண் டிருக்கும் பூஞ்சோலைகள்; பச்சைப் பசேல் என்று-மரகதப் பாய் விரித்தது போன்ற வயல் வெளிகள் - அவற்றில் அறுவடைக்குத் தயாராகித் தலை சாய்த்து நிற்கும் நெல் மணிகள். அந்தப் பொற்கதிர்களைத் தடவிக்கொண்டே அலை அலையாய்த் தவழ்ந்து செல்லும் இனிய தென்றல் காற்று

ஆற்றங்கரைத் தெருவை ஒட்டி மக்கள் குளிப்பதற்காக மன்னர்களால் கட்டப்பட்ட கல், படித்துறை. அதன் கரை யோரச் சுவர்களில் எவ்வித ஆபாசக் கிறுக்கல்களும் இல் லாமல்; வெள்ளையும் காவியும் கால வெள்ளத்தில் கரைந்து கைாண்டிருந்தது.

கரையில் அடர்ந்து கிளை பாப்பி நிற்கும் வயோதிக ஆலமரம். அதன் அருகே யாரோ இணையாக நட்டிருந்த வேப்ப மரமும் செழித்து வளர்ந்திருந்தது. அரச மரத்தைச் சுற்றிலும், கல்லிலே வடித்து நிறுத்தப்பட்டிருக்கும் நாக ராஜாக்கள்.