பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி சால ள கமா? 101

“ வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில்

மானுடர் வேற்றுமையில்லை,’

என்று உணராத-அல்லது உணரமறுக்கும் வெள்ளையருக்கு அடிமைப்பட்டு, வெட்கமின்றி வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்த காலம்.

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்கிற தத்துவமோ

“எல்லோரும் ஒர் இனம் - இங்கு எல்லோரும் ஓர் நிறை,’ என்கிற ஒருமைப்பாட்டு உணர்வோ - ஒரு சிறிதுமில்லாது

ஆத்திகத்தையும்; சனாதனதர்மங்களையும்; இந்து மதக் கோட்பாடுகளையும் சரிவரப் புரிந்து கொள்ள முனையாமல் - தங்களுக்குள் ஜாதிமத பேதங்களினால் மனம் பேதலிக்கப்பட்டு, அவற்றில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும். ஆவேசமான ஈடுபாடும் கொண்டவர்களால் சிலர் ஒதுக்கப்பட்டும்; சிலர் மறைமுகமாக நிராகரிக்கப் பட்டும்; பலர் பகிரங்கமாகவே அவமானத்திற்கும், கண் டனங்களுக்கும் இலக்காகி - அக்கிரகாரத்துக் கிணறு முதல்; பொதுக் குளம் வரை - மனிதனுக்கு மனிதன் உள்ள சம உரிமைகள் கூட மறுக்கப்பட்டு--

அனைவருக்கும் பொதுவான ஆண்டவனை ஆலயத்தில் சென்று தரிசிக்கக் கூட அக்கினிப் பிரவேசம் அவசியமாகி விட்ட அந்த கால கட்டத்தில்

சுப்பராம பாகவதர் அந்த ஊரிலேயே வித்தியாச மானவராக மாறுபட்டவராக விளங்கினார்.

மகாத்மா காந்தியிடம் அளவற்ற பக்தியும், ஈடுபாடும்; அவரது கொள்கைகளிலும் லகூதியங்களிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்த லக்ஷக்கணக்கான தீவிர காந்திய வாதிகளில் பாகவதரும் ஒருவராக - ஆனால் குறிப்பிடத் தக்கவராகத் திகழ்ந்தார்.