பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி சால ஸ்-கமா? 103!

மற்றவர் வர்ணிப்பது போல் - உயர் அந்தண வகுப்பில் பிறந்த பாகவதர், சிஷ்யையாயிருந்த வேற்று ஜாதிப் பைண் சுந்தரியை அவர் இரண்டாந்தாரபாக மணந்து கொண்டு வீட்டுக்கு வந்தபோது

ஊரே திரண்டு, அவர் வீட்டு வாசல் முன் கூடி நின்றது. ஆனால் பாகவதர் அசையவில்லை. கையிலெடுத்த தம்பூராவைக் கீழே வைக்காமல் விரல்கள் மீட்டிக் கொண் டிருந்தன. கண்ணை மூடிக் கொண்டு, நாட் கணக்காய், இரவு பகல் அன்ன ஆகாரமின்றி இசை மழையாய் இதயத்தினுள் பொழிந்து கொண்டிருந்தார்.

இன்னும் இப்படியே ஒருநாள் நீடித்தால் ரத்தம் கக்கி பாகவதர் இறந்து விடுவார்'- என்று அவரைப் பரிசோதித்த உள்ளுர் டாக்டர், வெளியே நின்று. கொண்டிருந்த கூட்டத்தினரிடம் எச்சரித்துச் சென்று விட்டார்.

ல கடிமியும், சுந்தரியும், “கோ"வென்று கதறி அழுது கொண்டிருந்தனர். பாகவதர் மட்டுமா பட்டினி? வீடு முழுதுமே நாலு நாள் பட்டுனியாயிற்றே!

இதற்கு மேலும் இந்தக் கொடிய காட்சியைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க உன்ஞர் வாசிகளால் இயலவில்லை. எத்தனைதான் ஜாதிப் பித்துக் கொண்டவர்களாயிருந்தாலும்; எதற்கும் உருகாத கல் நெஞ்சுக்காரர்கள் அல்லவே அவர்கள்!

வாசலிலே கூடியிருந்தவர்கள் கூட்டமாகச் சென்று பாகவதர் கால்களில் விழுந்து வேண்டி - உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. -

பாகவதரிடமும், அவரது ஒப்பற்ற இசை மீதும் மட்டற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளவர்கள் அவர்கள். நாள் தவறாமல் எத்தனையோ பெரிய மனிதர்கள் காரைப் போட்டுக் கொண்டு அவரைத் தேடித்