பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

காற்றையும், அதில் இனிமையையும்; கடலையும், அதில் பொங்கி எழும் அலைகளையும்; விண்ணையும், அதில் வண்ண வண்ணக் கோலங்களையும்; தழலையும், அதற்கொரு வெம்மையையும் படைத்த கடவுள், புவியையும் அதில் அழகிய புல்லையும் படைத்தார்.

ஒடும் மிருகங்களையும், கூடும் பறவை இனங்களை யும் படைத்தார். கைவண்ணம் மிளிர்ந்ததே அன்றி அவர் உள்ளத்தில் கருத்தமைதி கூடவில்லை போலும்! பின்னர் மனிதனைப் படைத்தார். அவனை மற்ற உயி ரினங்களினின்றும் வேறுபடுத்த எண்ணிப் பகுத்தறிந்து சிந்திக்கும் திறனோடு படைத்தார். அந்தச் சிந்திக்குந் திறனே. அவரது படைப்புத் தொழிலின் வெற்றியாக வும், படைக்கப்பட்டவனின் வீழ்ச்சியாகவும் அமைந்தது.

காலங்களின் கரங்களில் அவன் வீழ்ந்தும் எழுந் தும் படும் பாட்டைக் கண்டு படைத்தவர் ரசித்தார்: எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் படைத்த மனிதன். அதே எண்ணங்களினால் உருவாவதைவிட்டு, உருக் குலை வதைக் கண்டு திருவின் உள்ளத்தில் கருணை பிறந்தது. மனிதனை மீட்க இசையைப் புகட்டினார்.

- அசைவிலிருந்து பிறக்கும் சொற்கள் இசையின் வடிவங்களாக மணக்க அவன் குரலில் இனிமையைக் கூட்டினார். சொல்லெல்லாம் இசையின் வடிவங்களாக ஒலித்தன. - -

பிறக்கும் குழந்தையின் குவா என்னும் முதற் குரல்முதல், ஆநிரைகளின் ம்மே” என்கிற அழைப்பு வரை, ஒலிகள் யாவும் இசையோடு இணைந்து முழங்கின.