பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி சால ஸாகமா? 105

டெண்ட் கூடாரத்தில், புதிசு புதிசாக தமிழ் டாக்கி படங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை - தன்னுடைய பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு டுரிங் டாக்கீஸ் ஸ்திரமாகவே

இருந்து கொண்டிருக்கும்.

ஆற்றங்கரையை ஒட்டினாற் போலுள்ள பொட்டல் வெளியில் அந்த டுரிங் டாக்கீஸ் இருந்தது. ஐந்து மணிக் கெல்லாம் ஜெனரேட்டர் ஒடத்துவங்கி ரிகார்டு போடத் துவங்கி விடுவார்கள்-கிராமத்து மக்கள் மின்சார விளக்கு களை டுரிங் டாக்கீசில்தான் கண்டு களிக்க முடியும். ஊரின் உள்ளே-காவிரிக் கரைத் தெருக்களிலும், அக்கிரகாரத்து விதிகளிலும், இருபது அடி இடைவெளியில் நிறுத்தப்பட் டிருக்கும் கல்தூண்களின் தலையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒமை எண்ணை விளக்கு ஒளியிலும்; வீட்டுப் பெண்கள் இல்லந்தோறும் மாடப் புரைகளில் ஏற்றி வைத்திருக்கும் நல்லெண்ணை அகல் விளக்கொளியிலும் தெருக்கள் தூங்கி வழிந்து கொண்டிருக்கும்.

சரியாகப் பகல் பதினோரு மணிக்கெல்லாம், அன்று இரவு வெள்ளித் திரையில் மின்னப் போகும் டாக்கியின் பெயர்ப் பலகைகளை மாட்டு வண்டியின் இருமருங்கிலும் கட்டிக் கொண்டு, பிரபல சினிமா நட்சத்திரங்கள் பாடிய பாப்புலரான பாடல்களை பாண்டு வாத்தியத்தில் வண்டி யினுள் ளிருந்தபடி உரக்க முழங்கிக் கொண்டும் சினிமா வண்டி ஊர் முழுதும் பவனி வரும். அந்போது

அன்றைப் படத்தின், நடிகநடிகையர் புகழ்ப்பட்டியலுடன் நீண்ட கதைச் சுருக்கத்தையும் தாங்கி, ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில், மீதியை வெள்ளித்திரையில் கண்டு களியுங்கள்’ என்று முடியும் சஸ்பென்சுடன் கலர் கலராக பல வண்ணங் களில் இருபுறமும் அச்சடிக்கப்பட்ட நீண்ட நோட்டீசுகளை

பு. இ.-7